புதுடில்லி. ஆக.3 கல் லூரிகளில் சேர்ந்து விட்டு அக்டோபர் 31க்குள் வெளியேறும் மாணவர் களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும் என யூஜிசி உத்தரவிட்டுள்ளது.
அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வரு கிறது. அதே வேளையில் உயர்கல்விக்காக பொது நுழைவுத் தேர்வைப் பல மாணவர்கள் எதிர் நோக்கி உள்ளனர். ஆயினும் முன் னெச்சரிக்கையாக வேறு சில உயர் கல்வி நிறுவனங்களில் அவர்கள் சேர்ந்துள்ளனர்.
இவ்வாறு சேர்ந்துள்ள மாணவர்கள் நுழைவுத் தேர்வு மூலம் இடம் கிடைக் கும்போது ஏற்கெனவே சேர்ந்துள்ள கல்லூரிகளில் இருந்து விலக நேரிடுகிறது. பொதுவாக அவ்வாறு வெளியேறும் மாண வர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தைத் திருப்பித் தருவது இல்லை. மேலும் அவர்களிடம் சேர்க் கையை ரத்து செய்யவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது குறித்து மாணவர்கள் பலர் புகார் அளித்திருந்த நிலையில் யுஜிசி தற்போது ஒரு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி, “ஏற்கெனவே கல்லூரிகளில் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள மாணவர்கள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் வெளியேறினால் அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பித் தரவேண்டும். மேலும் சேர்க்கையை ரத்து செய்யத் தனியாகக் கட்டணம் வசூலிக்க கூடாது” என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியக் குற்றவியல் சட்டங்களை மாற்ற ஒன்றிய அரசு ஆலோசனை
புதுடில்லி, ஆக.3 இந்தியக் குற்றவியல் சட்டங்களை மாற்ற ஒன்றிய அரசு ஆலோ சிப்பதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித் துள்ளார்.
தற்போது டில்லியில் நாடாளுமன்ற குளிர் காலத் தொடர் நடந்து வருகிறது. இதில் மக்களவை உறுப்பினர் ஒருவர் இந்தியக் குற்றவியல் சட்டங்களை மாற் றுவது குறித்து கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா எழுத்துப் பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.
அமைச்சர் அந்த பதிலில்,
“ஒன்றிய அரசு இந்தியத் தண்டனை சட்டம் 1860, குற்றவியல் தண்டனை சட்டம் 1973, இந்தியச் சாட்சிய சட்டம் 1872 ஆகியவற்றில் மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும் வகையிலான திருத்தங்களைக் கொண்டு வர சம்பந்தப் பட்ட அமைச்சகம், துறைகளின் அதிகாரி களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
உள்துறை விவகாரத்துக்கான நாடாளு மன்ற குழுவின் 111 மற்றும் 128ஆவது அறிக்கை களில் இது குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவற்றில், பெயரளவிலான திருத்தங்களாக அல்லாமல், தேவையான திருத்தங்களை மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டது. தற்போதைய 146ஆவது அறிக்கையில், மக்கள் நலன் சார்ந்த, விரைவில் நீதி கிடைக்கும் வகையிலான திருத்தங்களை மேற்கொள் ளப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் இவை நிறைவேற்றப்படும்”என அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment