சென்னை, ஆக. 27- ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறுவ தாக இருந்த தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம், ஒருநாள் முன்னதாக 29ஆ-ம் தேதிக்கு மாற்றப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற் காக பல்வேறு நடவடிக் கைகளை தொழில்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறைகள் மேற்கொண்டு வருகின் றன. இந்நிலையில், பல் வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக அரசிடம் விண்ணப்பித்து உள்ளன. இந்த நிறுவனங் களுக்கு அனுமதியும் சலுகைகளும் வழங்குவது குறித்து முடிவு எடுப்பதற் காக தமிழ்நாட்டில் அமைச்சரவைக் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில் ஆக. 30ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந் தது.
தற்போது, அரசு அலுவல்கள் காரணமாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் நாள் மாற் றப்பட்டுள்ளது. அதன் படி, ஆக.30-க்கு பதில் ஒருநாள் முன்னதாக ஆக.29ஆ-ம் தேதி மாலை 6 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
இதில், இணையதள ரம்மி தடைக்கான அவ சரச் சட்டம், பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட் டம் தொடக்கம் உள் ளிட்டவற்றுக்கான ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது.
No comments:
Post a Comment