கருநாடகா, டில்லி, பஞ்சாப் மாநில முதலமைச்சர்களுக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
சென்னை, ஆக. 25- கருநாடகா, டில்லி,பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலுள்ள தேசிய சட்டக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்று அம்மாநிலங் களின் முதலமைச்சர்களுக்கு அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் நலச்சங்க பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி கடிதம்மூலம் வலியுறுத்தினார்.
அதற்கு தேசிய சட்டக்கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குரிய 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடை முறைப்படுத்திட உரிய நடவடிக்கை எடுப்பதாக கருநாடகா, டில்லி, பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள் பதில் அளித்துள்ளார் கள் என்று அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment