சிறீநகர், ஆக. 25 வெளி மாநிலங்களைச் சேர்ந்த 25 லட்சம் பேரை ஜம்மு - காஷ்மீர் வாக்காளர் பட்டியலில் இணைக் கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு அனைத்துக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உரிய சட்டப் போராட்டத்தை நடத்து வோம் என்று அந்தக் கட்சிகள் அறிவித்துள்ளன. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கும் அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவை, நரேந்திர மோடி அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு எதேச்சதிகாரமான முறையில் ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு - காஷ்மீருக்கான மாநிலத் தகுதியைப் பறித்து, அதனைகாஷ்மீர், லடாக் என 2 யூனி யன் பிரதேசங் களாகவும் பிரித்தது. அதன் பின்னர் காஷ்மீரில் இதுவரை அரசியல் நட வடிக்கைகள் தொடங்கப்படவில்லை.
இதனிடையே, ஜம்மு - காஷ் மீர் யூனியன் பிரதேச சட்டப் பேர வைக்கு தேர்தல் நடத்து வதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ள நரேந் திர மோடி அரசு, முதலில் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொண்டது. இதுவே சர்ச் சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது வாக்காளர் பட்டியல் தயாரிப்பிலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 25 லட்சம் பேர்களை ஜம்மு - காஷ்மீர் வாக் காளர் பட்டியலில் சேர்த்து தனது தகிடு தத்த வேலைகளை அரங் கேற்றியுள்ளது. இந்த புதிய வாக் காளர் பட்டியல் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வெளியிடப்பட வும் உள்ளது. இந்நிலையில் இது பற்றி விவாதிக்க தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தலைமையில் ஜம்மு -காஷ்மீர் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முப்தி, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் விக்கார் ரசூல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப் பினர் முகம் மது யூசுப் தாரிகாமி மற்றும் சிவசேனா தலைவர்கள் கலந்து கொண்டனர். இந் நிலையில், கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்த மேனாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, ‘‘அரசின் முடிவு ஜம்மு - காஷ்மீரின் தனித்து வத்தை இழக்கச் செய்யும். மாநிலத்தை சாராத வெளிநபர் களின் கையில் சட்டமன்றம் சென்றுவிடும். உள்ளூர் மக்களுக் கான வாக்குரிமை பறிக்கப்படும். வெளியாட் களுக்கு வாக்கு உரிமை அளிப்பதை எதிர்ப்பதில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக உள்ளோம். உரிய சட்டப் போராட்டத்தை நடத்துவது பற்றி திட்டமிட்டுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment