புதுடில்லி, ஆக.25 பி.ஜே.பி.யில் சேர ரூ.25 கோடி வரை பேரம் பேசப்படுகிறது என்று டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாள ரும், டில்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் நேற்று (24.8.2022) கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சியை உடைக்க மத்தி யில் ஆளும் பாஜக அரசு பல்வேறு வழி முறைகளை கையாண்டு வருகிறது. ஏற்கெ னவே, சிபிஅய் மற்றும் அமலாக்கத் துறையை ஏவி கட்சியின் முக்கிய தலைவர் கள்மீது பொய் வழக்குகளை பதிந்து நெருக் கடி கொடுத்தது. தற்போது, ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டி வருகிறது.
மேலும், கட்சியை உடைக்க கோடிக் கணக்கில் லஞ்சம் தருவதாகவும் பாஜக பேரம் பேசியுள்ளது. இது மிக தீவிரமான அரசியல் பிரச்சினை. இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.
இதனிடையே ஆம் ஆத்மி தேசிய செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் கூறியதாவது:
ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் அஜய் தத், சஞ்சீவ் ஷா, சோம்நாத் பார்தி மற்றும் குல்தீப் ஆகியோரை பாஜக தலைவர்கள் தொடர்பு கொண்டு கட்சியை உடைக்க ரூ.20 கோடி வரை தருவதாக பேரம் பேசியுள்ளனர். மேலும், கட்சியை உடைத்து இன்னும் பல சட்ட மன்ற உறுப்பினர்களை அழைத்து வந்தால் ரூ.25 கோடி வரை தருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மிரட்டியும், லஞ்சம் கொடுத்தும் பல்வேறு மாநிலங்களில் அரசுகளை கவிழச் செய்து இருக்கலாம். ஆனால், இது டில்லி. இந்த மக்கள் கெஜ்ரிவால் மீதான முழு நம்பிக்கையின் காரணமாகவே அவரை 3 முறை முதலமைச்சர் பதவியில் அமர வைத்துள்ளனர். எனவே, பாஜகவின் எந்த மிரட்டலுக்கும் அஞ்சப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
2021-2022 ஆம் ஆண்டுக்கான புதிய மது பான உரிம கொள்கையை அமல்படுத்தியதில் டில்லி துணை முதலமைச்சரும் ஆம் ஆத்மி முக்கிய தலைவருமான மணிஷ் சிசோடியா விடம் சிபிஅய் விசாரணை நடத்தியது. இந்த சூழ்நிலையில், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியே வந்தால் அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும், முதலமைச்சர் பதவி தரப்படும் என்று மணிஷ் சிசோடியாவிடம் பாஜக தரப்பில் பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பா.ஜ.க. மறுப்பு
தற்போது அதே பாணியில் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க பா.ஜ.க. லஞ்சம் கொடுக்க முன்வந்தாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பாஜக, பிரச்சினைகளை திசை திருப்பவே ஆம் ஆத்மி கட்சி இது போன்ற நாடகங்களை அரங்கேற்றி வருவதாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment