இந்தியர்களின் 22 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் ஜூனில் முடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 4, 2022

இந்தியர்களின் 22 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் ஜூனில் முடக்கம்

சென்னை, ஆக.4 வாட்ஸ்அப் விதிகளை மீறி செயல்பட்ட சுமார் 22லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கி இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

சமூகவலைதளங்களில்  ஒன்றான வாட்ஸ்அப் நிறுவனம் சுமார் 50 லட்சத் துக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ளது. இன்றைய மக்களி டையே எளிதாக தகவலை தெரிவிக்கும் ஊடகமாக வாட்ஸ்அப் திகழ்கிறது. அதே வேளையில் இதன்மூலம் வதந் திகள், சமூக விரோத செயல்களும் நடை பெறுகின்றன. இதையடுத்து, ஒன்றியஅரசு சமூக ஊடகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள் ளது.  சமூக வலைதள நிறுவனங்கள், பெறப்படும் புகார்கள் குறித்தும் அவற் றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை வெளியிட வேண்டுமென ஒன்றிய அரசு கடந்த ஆண்டு இயற்றிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் தெரிவிக்க ப்பட்டிருந்தது. அதன்படி,  . விதிமீறல் குறித்து அளிக்கப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, மாதந்தோறும், எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் குறித்து  அறிக்கைகளை வெளி யிட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது வெளி யாகி உள்ள கடந்த ஜூன் மாதத்துக்கான அறிக்கையில், 22.10 லட்சம் இந்தி யர்களின் கணக்குகள் முடக்கப் பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது. விதிமீறல் தொடர்பாக நிறுவனத்துக்கு வந்த புகார்கள் அடிப்படையிலும், விதிமீறல்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது.புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளைத் தொடர்ந்து, மெட்டாவுக்குச் சொந்த மான வாட்ஸ்அப் ஜூன் மாதத்தில் இந்தியாவில் 22 லட்சத்திற்கும் அதிக மான வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்தது.  தங்களது கவனத்துக்கு மொத்தம் 632 புகார்கள் வந்தன, அவற்றில் 64 புகார்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த உண்மைகள், ‘தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இன் கீழ் இந்திய மாதாந்திர அறிக் கையில்’ முன்னிலைப்படுத்தப்பட் டுள்ளன. 


No comments:

Post a Comment