உரத்தநாடு விடுதலை சந்தா வசூல் குழு பொறுப்பாளர்கள் 33-ஆவது முறையாக 2ஆவது தவணையாக விடுதலை சந்தா ரூ2,16,000/-த்தையும், உரத்தநாடு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.கார்த்திகேயன் 10 விடுதலை சந்தா ரூ20,000/-த்தையும், உரத்தநாடு தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் முருகையன் விடுதலை சந்தா ரூ.2000/த்தையும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர்.
உரத்தநாடு மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.டி.மகேஸ் கிருஷ்ணசாமி விடுதலை சந்தா ரூ2000/-த்தையும், மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் மு.கா.கார்த்தி விடுதலை ஆண்டுசந்தா ரூ2,000/-த்தையும், உரத்தநாடு பேரூராட்சி மன்றத் தலைவர், அ.ம.மு.க மாவட்ட செயலாளர் மா.சேகர், பேரூராட்சி மன்ற உறுப்பினர் விடுதலை சந்தா ரூ2,000/-த்தையும் தமிழர் தலைவரிடம் வழங்கினர். உரத்தநாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.இராமச்சந்திரன் தமிழர் தலைவர் ஆசிரியரை வரவேற்றார். உரத்தநாடு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் தனபால் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று விடுதலை சந்தா வழங்கினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி ஆசிரியர் அவர்களை அன்புடன் வரவேற்று விடுதலை சந்தா ரூ1,000/-த்தையும், அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் ராஜேஸ்கண்ணன் விடுதலை சந்தா ரூ.1,000/-த்தையும், உரத்தநாடு கனி ஜவுளி ஸ்டோர் உரிமையாளர் முகமது கனி விடுதலை சந்தா ரூ.1000/-த்தையும் உரத்தநாடு பூக்கடை சூரி அவர்கள் விடுதலை சந்தா ரூ.1000/-த்தையும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார்.உரத்தநாடு வீரமணி மளிகை உரிமையாளர் வீ.அகிலன் விடுதலை சந்தா ரூ.5,000/-த்தையும், உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக துணைத்தலைவர் இரா.துரைராசு விடுதலை சந்தா ரூ.1,000/-த்தையும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர்.காங்கிரஸ் கட்சி மாவட்டப் பொதுச்செயலாளர் கக்கரை மனோகரன் பழக்கூடை வழங்கி விடுதலை 5ஆண்டு சந்தா ரூ10,000/-த்தை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். உரத்தநாடு பேரூர் தி.மு.க செயலாளர் கிருஷ்ணக்குமார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மகிழ்வுடன் வரவேற்றார்.
No comments:
Post a Comment