பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் சாமியார் சொன்னதால் 18 மாத குழந்தை நரபலி கொடுக்கப்பட்ட அவலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 30, 2022

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் சாமியார் சொன்னதால் 18 மாத குழந்தை நரபலி கொடுக்கப்பட்ட அவலம்

லக்னோ, ஆக. 30- பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அம்ரோஹா மாவட்டத்திற் குட்பட்ட மலக்பூர் கிராமத்தில் 18 மாத குழந்தையை நரபலி கொடுக்கப்பட்ட அவலம் நடந்துள்ளது.

தங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இறந்துபோகின்றன என்பதற்காக, சாமி யாரின் பேச்சைக் கேட்டு உறவுக்காரரின் குழந்தையையே நரபலி கொடுத்து கொன்ற அவலம் நடந்துள்ளது.

அக்கிராமத்தில் ரமேஷ் குமார் என்ப வரது 18 மாத ஆண் குழந்தையை திடீரென காணவில்லை. இதையடுத்து குழந்தை யைப் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. பின்னர் இரண்டு நாட்கள் கழித்து கிராமத்திற்கு வெளியே உள்ள கரும்பு தோட்டத்தில் ஒரு குழந்தையின் உடல் பாகங்கள் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குழந்தையின் உடலை மீட்டு காவல் துறையினர் விசாரணை செய்தபோது காணாமல்போன ரமேஷ் குமாரின் குழந்தை என்று தெரியவந்தது.  ரமேஷ் குமாரின் சகோதரருக்கு ஏற்கெனவே மூன்று குழந்தைகள் பிறந்த உடன் இறந்துள்ளன. இதையடுத்து சகோதரரின் மனைவி சரோஜா தேவி கர்ப்பமடைந் துள்ளார். இந்த குழந்தை நன்றாகப் பிறக்க வேண்டும் என நினைத்து இந்த தம்பதியினர் சாமியார் ஒருவரைச் சந்தித் துள்ளனர்.

அந்த சாமியார், குழந்தை ஒன்றை நரபலி கொடுக்க வேண்டும் என கூறி யுள்ளார். இதையடுத்து அவர்கள் தனது தம்பி குழந்தையை நரபலி கொடுத்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் சரோஜா தேவி அவர் கணவரைக் கைது செய்துள் ளனர். குழந்தை நலமாகப் பிறக்க 18 மாத குழந்தையைப் நரபலி கொடுத்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment