1,632 புதிய காவல் குடியிருப்புகள்: முதலமைச்சர் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 9, 2022

1,632 புதிய காவல் குடியிருப்புகள்: முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, ஆக. 9- ஆயிரம் விளக்கு, புதுப்பேட்டையில் ரூ.286 கோடியே 81 லட்சம் செலவில் கட்டப்பட்ட 1,632 புதிய காவல் குடியிருப்புகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு வளாகத்தில் ரூ.186 கோடியே 51 லட்சம் செலவில் கட்டப்பட்ட 1,036 காவலர் குடியிருப்புகள் திறப்பு விழா நேற்று (8.8.2022) அன்று நடைபெற்றது. விழா வில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு இந்த குடியிருப்புகளை திறந்து வைத்தார். பின்னர் 5 காவலர் குடும்பங்களிடம் குடியிருப்புக் கான சாவிகளை வழங்கினார். 

 இந்த நிகழ்ச்சியின்போது தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் 2020--2021ஆ-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத்தொகை யான ரூ.3 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார். 

நிகழ்ச்சியில் உள், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வரவேற்று பேசினார்.  காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு நன்றி கூறினார். 

ஆயிரம் விளக்கு காவல் குடியிருப்பு திறப்பு விழா நிகழ்ச் சியில், மற்ற மாவட்டங்களில் கட்டப்பட்ட காவல் நிலையங் கள், குடியிருப்பு கட்டடங்களை யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

 இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டம் பெருந் துறையில் ரூ.5 கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்பட் டுள்ள 32 காவல் குடியிருப்புகள், சென்னை எம்.ஜி.ஆர். நகரில் காவல் நிலையம், ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், கன்னியா குமரி மாவட்டம் கோட்டாரில் போக்குவரத்து ஒழங்கு பிரிவு காவல் நிலையம் என ரூ.3 கோடியே 73 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 4 காவல் நிலைய கட்டடங்கள், நாகை மாவட்டம் வேதாரண்யம் காவல் துணை சூப்பிரண்டு முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, திருச்சி மாவட்டத் தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணி வளாகத் தில் நிர்வாக அலுவலக கட்ட டம் என ரூ.4 கோடியே 54 லட்சம் செலவில் கட்டப்பட் டுள்ள 2 காவல்துறை கட்டடங் கள், நெல்லை மாவட்டம் அம் பாசமுத்திரம் கிளை சிறைச் சாலையில் ரூ.2 கோடியே 35 லட்சம் செலவில் கட்டப்பட் டுள்ள சிறைகள் மற்றும் சீர் திருத்தப்பணிகள் துறை பணி யாளர்களுக்கான 11 குடியிருப் புகள், சென்னை மணலியில் 13 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பணியாளர்க ளுக்கான 80 குடியிருப்புகள் திறக்கப்பட்டன. திருப்பூர் மற்றும் அவிநாசி, கோவை மாவட்டம் பீளமேடு ஆகிய இடங்களில் ரூ.4 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட் டுள்ள 3 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்கள், சென்னை மணலியில் ரூ.2 கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கான பாசறை கட்டடம், "உங்கள் சொந்த இல்லம்" திட்டத்தின் கீழ் சிவகங்கை வட்டம் பையூர் பிள்ளைவயல், சேலம் மாவட் டம் தாரமங்கலம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் - கண் டம்பாக்கம் ஆகிய இடங்களில் ரூ.55 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் சீருடை பணியா ளர் களுக்காக கட்டப்பட்டுள்ள 253 வீடுகள் என மொத்தம் ரூ.378 கோடியே 52 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment