புதுடில்லி, ஆக.3 உக்ரைனில் படிக்க நமது நாட்டு மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரூ.133 கோடி நிலுவையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. 2022 ஜூன் 30ஆம் தேதி வரை உக்ரைனில் படிப்பதற்காக 1,387 மாணவர்கள் இந்திய வங்கிகளில் கல்விக் கடன் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.
உக்ரைன் நாட்டில் படிப்ப தற்காக இந்திய மாணவர்கள் இந்திய வங்கிகளில் கடன் பெற்று உள்ளார்களா? அப்படியானால், அவர்கள் திருப்பி செலுத்தப் படாத மொத்த கடன்களின் எண்ணிக்கை எவ்வளவு என மக் களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரத் எழுத்துப்பூர்வமாக பதில் அளித் தார்.
அப்போது, இந்திய வங்கி களின் கூட்டமைப்பிடம் இருந்து பெறப்பட்ட தகவல்படி 2022 ஜூன் 30ஆம் தேதி வரை உக்கிர னில் படிப்பதற்காக 1,387 மாண வர்கள் இந்திய வங்கிகளில் கல்வி கடன் பெற்றுள்ளனர். இதில் 133.38 கோடி ரூபாய் திருப்பி செலுத்தப்படவில்லை என தெரி விக்கப்பட்டு உள்ளது.
கல்விக்கடன் திருப்பி செலுத் தப்படாத நிலையில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராயுமாறு ஏற்கெனவே ஒன் றிய அரசு வங்கிகள் சங்கத்தை அறிவுறுத்தி உள்ளதாகவும், அதே நேரத்தில் ஒரு மாணவர் கடன் பெறும் போது வழங்கப் பட்ட அவகாசத்தின் படி குறிப் பிட்ட காலத்திற்குள் வங்கிக் கடனை செலுத்தி இருக்க வேண் டும். மாறாக மாணவரின் கல்வி சில தவிர்க்க முடியாத காரணங் களுக்காக நீட்டிக்கப்படும் பட்சத் தில் மாணவர் கல்விக்கடனை செலுத்துவதற்கான கால அவ காசமும் நீட்டிக்கப்படுவதாகவும் ஒன்றிய நிதி அமைச்சகத்தின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment