13 ஆண்டுகளுக்குப்பின் லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சி.பி.அய். சோதனையாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

13 ஆண்டுகளுக்குப்பின் லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சி.பி.அய். சோதனையாம்!

பாட்னா, ஆக. 25- ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் மத்தியில் 2004-2009 கால கட்டத்தில் மன் மோகன்சிங் அரசில் ரயில்வே அமைச்சராக இருந்தவர், அப் போது அவர் ரயில்வே துறையில் வேலை வழங்குவதற்காக தனது குடும்பத்தினர் பெயரில் நிலங்களை லஞ்சமாக பெற்றார் என ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சம்பவம் நடந்து 13 ஆண்டு களான நிலையில், லாலு பிரசாத், மனைவி ராப்ரி தேவி, மகள்கள் மிசா பாரதி, ஹேமா பாரதி உள் ளிட்டோர் மீது சி.பி.அய். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து கிறது. 

இந்த ஊழலில் லாலு பிரசாத் துக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 25 இடங்களில் நேற்று (24.8.2022) சி.பி.அய். அதிரடி சோதனைகள் நடத்தியது. இந்த சோதனைகள் டில்லி, குருகிராம், பாட்னா, மதுபானி, கதிஹார் உள்ளிட்ட நகரங்களில் நடந்தன. குருகிராமில், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுக்கு சொந்தமான நிறுவனத்தால் கட் டப்பட்டு வருவதாக நம்பப்படுகிற ஒரு வணிக வளாகத்திலும், லாலு பிரசாத்துக்கு நெருக்கமான சட்ட மேலவை உறுப்பினர் சுனில் சிங், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆஷ்பக் கரீம், பயஸ் அகமது மற்றும் மேனாள் சட்ட மேலவை உறுப்பினர் சுபோத் ராய்க்கு சொந்தமான இடங்களி லும் சி.பி.அய். அதிகாரிகள் சோத னைகள் நடத்தினர்.

பீகார் சட்டசபையில், முதல மைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதாதளம், ராஷ்டீரிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி அரசு நேற்று (24.8.2022) நம்பிக்கை தீர்மானத்தை சந்தித்த நிலையில், சி.பி.அய். அதிகாரிகள் இந்த சோதனைகளை நடத்தியுள் ளனர். 

இது தொடர்பாக ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சக்தி சிங் யாதவ் கருத்து கூறும்போது, "இதைக்கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. நேற்று (24.8.2022) இரவுதான் டிவிட்டரில் அமலாக்கத்துறை, சி.பி.அய்., வரு மானத்துறை அதிகாரிகள் பீகாரில் அடுத்த கட்டமாக சோதனை நட வடிக்கையை மேற்கொள்ளலாம் என குறிப்பிட்டிருந்தேன்" என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆசித் நாத் திவாரி கருத்து கூறுகையில், "சர்வாதிகாரிகளான ஹிட்லரோ, முசோலினியோ என்றென்றும் அதி காரத்தில் நீடிக்கவில்லை என்பதை சி.பி.அய்., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் அதி காரிகள் நினைவில் கொள்ள வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment