கன்னியாகுமரி, ஆக. 20- கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரியார் ஆயிரம் போட்டி எழுச்சியுடன் தொடங் கியது. பெரியார் ஆயிரம் வினா விடைப் போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் புனித பிரான்சிஸ் மேல் நிலைப் பள்ளியில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் சார்பாக பெரியார் ஆயிரம் வினா விடைப் போட்டி சிறப்பாக நடந்தது. மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். மாவட்ட திராவிடர் கழக தலைவர் மா.மு சுப்பிரமணியம் போட்டியினை தொடங்கி வைத் தார். மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், இளை ஞரணி தலைவர் இரா. இராஜேஷ் ஆகியோர் பங்கேற்றனர்,
பெரியார் மணியம்மை பல் கலைக்கழக பேராசிரியர் செல்வ குமார் போட்டியினை ஒருங்கிணைத் தார், பள்ளி தலைமை ஆசிரியர் இராணி போட்டிக்கான ஏற்பாடு களை செய்திருந்தார். குமரி மாவட் டத்தில் பல பள்ளிகளிலும் போட்டி நடைபெறு கின்றது.
கன்னியாகுமரி, நாகர்கோவில் கண்கார்டியா உயர்நிலைப்பள்ளி யில் பெரியார் 1000 தேர்வு நடை பெற்றது.
குமரிமாவட்டம் புனித பிரான் சிஸ் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா _ விடை குறித்து கருத்துக்களை மாணவர் களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. உடன் குமரிமாவட்ட தலைவர் மா.மு . சுப்பிரமணியம் செயலாளர் கோ. வெற்றி வேந்தன், பொதுக்குழு உறுப்பினர் ம தயாளன், துணை தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகி யோர் கலந்துகொண்டனர். தக் கலை அமலா கான்வென்ட் மாண வர்களுக்கு பெரியாருடைய நூல் கள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரியில் புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி 124 மாணவர்களுக்கு பெரியார் 1000 வினா விடை போட்டிக் கான புத்தகம், பள்ளி முதல்வர் மற்றும் தமிழ் ஆசிரியர் அவர்களி டம் வழங்கப்பட்டது.
குமரிமாவட்டம் புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா _ விடை குறித்து கருத்துக்களை மாணவர்க ளுக்கு இன்று எடுத்துக்கூறியபோது. உடன் குமரிமாவட்ட தலைவர் மா.மு . சுப்பிரமணியம் செயலாளர் கோ. வெற்றி வேந்தன், பொதுக்குழு உறுப்பினர் ம தயாளன், துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகி யோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment