ஒரத்தநாடு, ஆக. 30- ஒரத்தநாடு நகரத் தில் நகர கழகத் தலைவர் பேபி. ரெ. இரவிச்சந்திரன்,தலைமையில் 378.மாணவ மாணவிகள் பெரியார் ஆயிரம் தேர்வை 4 மய்யங்களில் சிறப்பாக எழுதினார்கள்
லண்டன் கிருஷ்ணமூர்த்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி 136 மாணவர்கள், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 89 மாணவிகள், லிட்டில் ரோஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 31 மாணவர் மாணவிகள், சிறீமெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 122 மாணவ மாணவிகள், பெரியார் ஆயிரம் தேர்வு மொத்தம் 378 மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்புடன் சிறப்பாக ஒரத்த நாடு நகர திராவிடர் கழகத் தலை வர் பேபி ரவிச்சந்திரன் தலைமை யில் தஞ்சை மாவட்ட கழக செய லாளர், அ.அருணகிரி மாவட்ட கழக துணைச் செயலாளர் அ.உத் திராபதி ஒன்றிய கழகத் தலைவர் த. ஜெகநாதன்,ஒன்றிய பகுத்தறி வாளர் கழகத் தலைவர் நெடுவை கு.நேரு,பெரியார் வீர விளையாட் டுக் கழக மாநில செயலாளர், நா. ராமகிருஷ்ணன் நகர இளைஞரணி தலைவர் பேபி.ரெ. ரமேஷ் நகர இளைஞரணி செயலாளர் ச. பிர பாகரன் ஒன்றிய கழக துணைச் செயலாளர், ந. பிரபு ஒன்றிய அமைப்பாளர்,பு.செந்தில்குமார் ஒன்றிய விவசாய அணி தலைவர் கக்கரக்கோட்டை, ம.மதியழகன் ஆகியோர் முன்னிலையில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின்)உதவி பேராசிரியர் கோமதி அவர் களின் ஒத்துழைப்புடன் மாண வர்கள் சிறப்பாக பெரியார் 1000 தேர்வு எழுதினார்கள்.
No comments:
Post a Comment