கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10-08-2022 அன்று பெரியார் ஆயிரம் வினா விடை போட்டி தேர்வு புத்தகம் 100 வழங்கப்பட்டது. .அதன் பின் 18-08-22 அன்று காலை பள்ளியில் இருந்து மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம் அவர்களை அழைத்து எங்கள் பள்ளியில் தாங்கள் வந்து மாணவிகளிடையே பேசினால் அதிகமான மாணவிகள் பெரியார் ஆயிரம் தேர்வில் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க காலை 10 மணி அளவில் சென்று பள்ளி மாணவிக ளிடையே தந்தை பெரியார் குறித்தும், தந்தைபெரியார் இந்த சமூகத்திற்கு ,பெண் விடுதலைக்கு, எவ்வாறு பாடுபட்டார் என்பதை பற்றியும், பெரியார் ஆயிரம் வினா விடை தேர்வு பற்றியும் அரைமணி நேரம் எடுத்துக் கூறிய பின்பு மேலும் 110 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு ஒப்புக்கொண்டு 110 புத்தகம் பெற்றுக் கொண்டனர் .மொத்தம் இப்பள்ளியில் 210 மாணவிகள் பெரியார் ஆயிரம் தேர்வை எழுதுகின்றனர். இப்பணியில் கிருஷ்ணகிரி நகர தலைவர் கோ. தங்கராசன், நகர ப.க தலைவர் ச. நாகராஜன் உடன் இருந்தனர்.
கிருஷ்ணகிரி டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கா. மாணிக்கம் அவர்களிடம் 108 பெரியார் ஆயிரம் புத்தகங்களை பெற்றுக் கொண்டார்.
No comments:
Post a Comment