கன்னியாகுமரி, ஆக. 30- கன்னியாகுமரியில் 4 பள்ளிகளில் பெரியார் 1000 வினா விடைப் போட்டி. 1250 மாணவர்கள் பங்கேற்றனர்.
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பெரியாருடைய கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் குமரி மாவட்டம் கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் மேல்நிலைப் பள்ளி புனித அந்தோனியார் மேல் நிலைப் பள்ளி, மேரி இமாகுலேட் உயர்நிலைப் பள்ளி, கோவளம் இக்னேசியஸ் உயர்நிலைப் பள்ளி களில் பெரியார் மணியம்மை பல் கலைக் கழகம் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சார்பாக பெரியார் ஆயிரம் வினா விடைப் போட்டி சிறப்பாக நடந்தது. மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். மாவட்ட கழக தலைவர் மா.மு சுப்பிரமணியம் மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன், கன்னியாகுமரி தோழர் க. யுவான்ஸ் மாவட்ட துணைத்தலைவர்
ச.நல்லபெருமாள் ஆகியோர் போட்டியினை தொடங்கி வைத் தனர்.
ப.க. செயலர் பெரியார் தாஸ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழக செய லர் எஸ். குமார தாஸ் ஆகியோர் பங்கேற்றனர், பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக பேராசிரி யர் நாராயணன், நவநீத கிருஷ்ணன் போட்டியினை ஒருங்கிணைத்த னர், கேள்விக்கு பதிலளித்த மாண வர்களுக்கு மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் பரிசு வழங் கினார்.
No comments:
Post a Comment