கிருட்டினகிரி, ஆக. 30- கிருட்டினகிரி நகரம் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 26-.8.2022 அன்று காலை 10 மணியளவில் கழக மாவட்ட செயலாளர்
கா.மாணிக்கம் தலைமையில், பெரியார் 1000 வினா-விடைப் போட்டி தேர்வு நடைபெற்றது. பள்ளி தமிழ் ஆசிரியை விக்டோரியா ராணி ஒருங்கிணைப்பில் நகர தலைவர் கோ தங்கராசன் கண்காணிப்பில் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 235 மாணவிகள் தேர்வு எழுதினர்.
கிருட்டினகிரி டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா-விடைப் போட்டி தேர்வு நடைபெற்றது. பள்ளி முதல்வர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் தேர்வை துவக்கி வைத்தார். திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம் கண் காணிப்பில் பள்ளி ஆசிரியர்கள் ஜெசிந்தா மேரி , சங்கர் ஆகியோர் ஒருங்கிணைப்பில் 108 மாணவர்கள் தேர்வு எழுதினர். ஒருங்கிணைத்த ஆசிரியர்களுக்கு "பெண் ஏன் அடி மையானால் "புத்தகம் வழங்கப்பட் டது. கிருட்டினகிரி நாளந்தா இன் டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் பெரியார் 1000 தேர்வை திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம் துவக்கி வைத்தார். பள்ளி தமிழாசிரியை கலையரசி அவர்கள் மாணவர்களை ஒருங்கி ணைத்தார். மொத்தம் 56 மாணவர் கள் தேர்வெழுதினார்கள். தமிழ் ஆசிரியைக்கு "பெண் ஏன் அடிமை யானாள்" புத்தகம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment