கடவுள் காப்பாற்றவில்லையே...! கோவில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 10 பக்தர்கள் பலி..! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 2, 2022

கடவுள் காப்பாற்றவில்லையே...! கோவில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 10 பக்தர்கள் பலி..!

கொல்கத்தா, ஆக.2 மேற்கு வங்காளத்தில் மின்சாரம் பாய்ந்து 10 பக்தர்கள் பரிதாபமாக பலியாகினர்.

மேற்கு வங்காள மாநிலம் கூச் பெகர் மாவட்டத்தில் இருந்து ஜல்பைகுரியில் உள்ள கோவில் திருவிழாவுக்கு ஒரு வேன் பக்தர்களை ஏற்றிச் சென்றது. வேனில் 37 பேர் சென்றனர். இரவில் மைனாகுரி பகுதிக்கு அருகே வந்தபோது கனமழை பெய்து கொண்டிருந்தது. மழையால் வேனின் ஜெனரேட்டர் பகுதியில் உள்ள வயர் அமைப்பில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு வேனில் மின்சாரம் பாய்ந்தது. இதில் வேனில் இருந்த அனைவரும் மின் அதிர்ச்சிக்கு ஆளாகி 10 பேர் பலியானார்கள். மேலும் 14 பேர் படுகாயம் அடைந் தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மற்றவர்கள் ஆபத்தின்றி உயிர்தப்பினர். இந்த நிகழ்வுபற்றி விரிவான விசாரணை நடந்து வருகிறது.


No comments:

Post a Comment