தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு

சென்னை, ஜூலை 23-  தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செயலாளர் கோபால் வெளியிட்டுள்ள அறிக் கை வருமாறு:

தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், தமிழ்நாடு அரசால் 1975ஆம் ஆண்டு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்டது. வங்கி சாரா நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி செயல்படு கிறது. மேலும் தமிழ்நாடு அரசு வகுக்கும் நெறிமுறை மற்றும் வழி காட்டுதலை பின்பற்றி அனைத்து நடவடிக்கைகளும் நடக்கின்றன.   

இந்நிறுவனத்தில் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து வைப்புநிதி பெறப்­படுகி றது. அந்த வைப்பு நிதி களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதம் இரண்டு திட்டங் களில் அளிக்கப் படுகிறது. அதாவது மாத வட்டி, காலாண்டு வட்டி மற்றும் ஆண்டு வட்டியாகவும் அளிக்கப்­படுகிறது. மற்றொரு திட்ட மான பணபெருக்கி" திட்டத்தில் வைப்பீடு முதிர்வடையும்பொழுது வட்டியுடன், முதலீடு திரும்ப அளிக்கும் திட்டம் உள்ளது.

மேலும் இங்கு பொதுமக்கள் மட்டுமில்லாமல் கம்பெனி, கூட் டுறவு, கோயில், கல்வி சாலைகள், பல்கலைக் கழகம், நம்பகம் மற்றும் அரசு துறைகளிலிருந்து வைப்புநிதி பெறப்படுகிறது. 47 ஆண்டுகளாக தொடர்ந்து லாபத்தில் இயங்கி கொண்டிருக்கும் இந்த நிறுவ னத்தில், இங்கு முதலீடு செய்யப்படும் தொகை பாதுகாப்பானது, பத்திர மானது என்பதால் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வைப்புநிதி செலுத்த மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். 

இங்கு குறைந்­தபட்ச வைப்புநிதி தொகை ரூ.50 ஆயிரமாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டு களில் முதலீடுகள் 400 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தொடர் வெற்றிக்கு காரணம் சிறந்த நிர்வாகம், அறிவார்ந்த மேலாண் மை, அரசின் வழிநடத்தல் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை. இந்த நிறுவனத்தில் 5 வகைகளில் ஓராண்டு முதல் அய்ந்து ஆண்டு வரை முதலீடு பெறப்­படுகிறது. 

தற்பொழுது இந்நிறுவனத்தில் ஓராண்டு கால வைப்பு நிதிக்கு 7 சதவீதம் வட்டியும், 2 ஆண்டு கால வைப்பு நிதிக்கு 7.25 சதவீதம் வட் டியும், 3 மற்றும் 4 ஆண்டு கால வைப்பு நிதிக்கு 7.75 சதவீதம் வட்டியும், 5 ஆண்டு கால வைப்பு நிதிக்கு 8.00 சதவீதம் வட்டியும், வழங்கப்படுகிறது. மூத்த குடி மக்களுக்கு 0.25 முதல் 0.50 வட்டி உயர்த்தி வழங்கப்படுகிறது. 

இந்த நிறுவனத்தில் மூத்த குடி மக்களுக்கு (58 வயது நிறைவடைந் தவர்கள்) 5 ஆண்டுகளுக்கு சேர்ந்த வட்டியாக 10.46 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது. முறையான சான்றிதழ் சமர்ப்பிக்கும் பட்சத்தில் வருமான வரி பிடித்தம் தவிர்க்கப் படும்.

ஒரு ஆண்டு, மாத வட் டியாக 7 சதவீதம் முதல் மற்றும் 5 ஆண்டு முதலீடு பெருக்கிடும் திட்டத்தில் 10.46 சதவீதம் வரை வட்டி அளிக்கப்­படுகிறது. 

-இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment