தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் க. திராவிடமுத்து அவர்களின் வாழ் விணையர் தி.செல்லம்மாள் (வயது 82) அவர்கள் இன்று (27.7.2022) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரான திராவிடமுத்து அவர்களின் குடும்பமே இயக்கக் குடும்பமாகும்.
வாழ்விணையரை இழந்து வாடும் மானமிகு திராவிடமுத்து, மகள் பேராசிரியர் வளர்மதி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு: மறைந்த அம்மையாரின் உடலுக்கு இன்று பிற்பகல் 1.15 மணிக்கு மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன், மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி, மாவட்டச் செயலாளர் பீம.தமிழ்பிரபாகரன், தருமபுரி மண்டலத் தலைவர் அ. தமிழ்ச்செல்வன், மாநில கலைத்துறை செயலாளார் மாரி.கருணாநிதி, மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் பெரு. முல்லையரசு ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment