புதுடில்லி,ஜூலை.25 காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அநாக ரிக வார்த்தைகளால் பாஜக செய்தித் தொடர்பாளர் வசைபாடியது தொடர்பாக பிரதமர்மோடியும், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட் டாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் ஜெ.பி.நட்டாவுக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதம்:
கடந்த ஜூலை 23-ஆம் தேதி செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாஜக செய்தித்தொடர்பாளர் பிரேம் சுக்லா கலந்துகொண்டார். அப்போது அவர் சோனியா காந்தியை அநாகரிக வார்த்தைகளால் வசைபாடினார்.
பாஜக மூத்த தலைவர்களும் செய்தித்தொடர்பாளர்களும் பண்பாடு குறித்து பேசும்போது நாட்டில் உள்ள மதிப்புக்குரிய பெண்களுக்கு எதிராக, குறிப்பாக 75 வயதான சோனியா காந்திக்கு எதிராக தொடர்ந்து ஆட்சே பத்துக்குரிய வகையில் பேசுகின்றனர். இது பெண்களுக்கு எதிராக பாஜக கொண்டிருக்கும் மனநிலையைக் காட்டுகிறது. இதுபோன்ற ஆட்சேபத் துக்குரிய கருத்துகளால் நாட்டில் அரசியல் தரம் தாழ்ந்து வருகிறது.
அரசியலில் கண்ணியம் காக்க வேண்டும், பெண்களிடம் மரியாதை யுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆளும் பாஜகவிடம் எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் தனது பேச்சாலும் நடத்தையாலும் பாஜக தொடர்ந்து அதிருப்தியை ஏற்படுத் துகிறது.
எனவே பாஜக தலைவர்களின் வெட்கக்கேடான, அநாகரிக பேச் சுக்கு பிரதமர் மோடியும் நீங்களும் (ஜெ.பி.நட்டா) நாட்டில் உள்ள பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அத்துடன் அரசியலின் கண்ணியத்துக்கு ஊறு விளைவிக்க வேண்டாம் எனவும், இழிவான வார்த் தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பாஜக தலைவர்கள் மற்றும் செய்தித்தொடர்பாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
சோனியா காந்தி அல்லது வேறு எந்த காங்கிரஸ் தலைவர் குறித்து தரக்குறைவாக பேசினால் அவதூறு வழக்கு தொடுப்பது போன்ற நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment