சத்துணவுக்கு ஆதாரா? : ராகுல் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

சத்துணவுக்கு ஆதாரா? : ராகுல் கண்டனம்

புதுடில்லி, ஜூலை 2 பணக்காரர்களுக்கு ஒன்று, ஏழைகளுக்கு ஒன்று என இரண்டு இந்தியாவை பாஜக அரசு உருவாக்கியுள்ளது என்று காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.  

அதானி குழுமம் அம்புஜா சிமென்ட் மற்றும் ஏசிசியில் உள்ள 6.38 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை எந்த வரியும் இல்லாமல் வாங்கும் அதே வேளையில், மில்லியன் கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு சத்தான உணவுப் பெற ஆதார் அடையாள அட்டைகள் தேவைப்படுகிறது என்று ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். 

இதுகுறித்து ராகுல் காந்தி சுட்டுரைப் பக்கத்தில் கூறியதாவது:- "இங்கு இரண்டு இந்தியா உள்ளது. பணக் காரர்கள் வரிவிலக்குகள் மற்றும் கடன் தள்ளுபடிகள் மூலம் கோடிக்கணக்கில் விழுங்குகின்றனர். ஏழை குழந்தைகள் அங்கன்வாடிகளில் சத்தான உணவு பெற ஆதார் அட்டை தேவைப்படுகிறது. பாஜக ஆட்சியில் நாட்டில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடை வெளி அதிகரித்து வருகிறது.”  இவ்வாறு அவர் கூறினார்.  

No comments:

Post a Comment