முகக் கவசம் அணிந்து தடுப்பூசிகளைச் செலுத்தி பாதுகாப்பாக இருப்போம்! கோவிட் தொற்று: தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

முகக் கவசம் அணிந்து தடுப்பூசிகளைச் செலுத்தி பாதுகாப்பாக இருப்போம்! கோவிட் தொற்று: தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு! 

சென்னை, ஜூலை 13 - முதலமைச்சர்  மு.க. ஸ்டா லின்  அவர்களுக்கு நேற்று (12.7.2022)  சற்று உடல் சோர்வு ஏற்பட்டதையடுத்து தன்னை அவர் மருத்துவர் களிடம் பரிசோதித்தபோது    கோவிட்  தொற்று  உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து  முதல மைச்சர் மு.க.ஸ்டாலின்  தனது  சமூக  வலைதளப்  பதிவில், கோவிட்  தொற்று  உறுதி  செய்யப்பட்ட தால், தாம்  தனிமைப்படுத்திக்  கொண்டுள்ள தாகவும், அனைவரும் முகக்கவசம் அணிந்து, தடுப்பூசிகளைச் செலுத்தி பாதுகாப்பாக இருப் போம்  எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நேற்று (12.7.2022)  வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு  வருமாறு :- 

இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரி சோதித்ததில் கோவிட் தொற்று உறுதி செய்யப் பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள் ளேன்.  அனைவரும் முகக்கவசம்  அணிவதோடு தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு,  பாது காப்பாய் இருப்போம்.  -இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


No comments:

Post a Comment