கரூர்/நாமக்கல், ஜூலை 3 தமிழ் நாட்டில் ஓராண்டு காலத்தில் செய் திருக்கும் சாதனைகளை பார்க்கும் போது மன நிறைவை தருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கரூர் திருமாநிலையூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (2.7.2022) நடைபெற்றது. மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமை வகித்தார். விழாவில், ரூ.28.60 கோடியில் முடிவுற்ற 95 திட்டப் பணிகளை திறந்துவைத்தும், ரூ.581.44 கோடியிலான புதிய திட்டப் பணி களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.500.83 கோடி மதிப்பில் 80,750 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங் கியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கரூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிப் பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஏற்றுமதி ஜவுளி உற்பத்தியை காட்சிப்படுத்த பெருங்காட்சி அரங்க வளாகம், ஜவுளி உற்பத்தி தரத்தை தொழில்நுட்ப பரிசோதனை செய்ய பன்னாட்டு ஜவுளி பரிசோதனை நிலையம், கரூர் திருமாநிலையூரில் ரூ.47 கோடியில் புதிய பேருந்து நிலையம் ஆகியவை அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் இந்த ஓராண்டு காலத்தில் கரூர் மாவட்டத்தில் செய்திருக்கும் சாதனைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு செய்திருக்கக்கூடிய சாதனைகளைப் பார்க்கும்போது மனநிறைவை தரு கிறது. மக்கள் மனங்களிலும் இதுதான் இருக்கிறது என்பது அவர்களது முகங் களைப் பார்க்கும்போது தெரிகிறது.
நேரத்தை வீணடிப்பதில்லை
வீண் விமர்சனங்களுக்கு பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிப்பதில்லை. மானத்தைப் பற்றி கவலைப்படுபவர்களுடன் போராடலாம். மானத்தைப் பற்றி கவலைப்படாதவர்களிடம் போராட முடியாது. ஆட்சியை பற்றி வீண் விமர்சனம் செய்பவர்களிடம் கேட் காமல், அரசால் பயனடைந்த பயனாளிகளிடம் கேளுங்கள்.
கோடிக்கணக்கான தமிழ் மக்களின் வீடுகளில் விளக்காக, அவர்கள் விளக் கேற்ற காரணமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மக்கள் எனக்கு முதலமைச்சர் பொறுப்பை வழங்கி உள் ளனர். அந்த நம்பிக்கையைக் காப்பாற் றுவேன். மக்களின் நியாயமான கோரிக் கைகளை செயல்படுத்தி வருகிறோம். நான் நினைப்பது மட்டும்தான் நடக்க வேண்டும் என நினைப்பவன் நானல்ல.
கரூர் மாவட்டத்தில் ஜவுளி, கொசு வலை உற்பத்தி, பேருந்து கூண்டுகட்டும் தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் உள்ளன. இதில், முக்கிய ஏற்றுமதி தொழிலாக ஜவுளித்தொழில் உள்ளது. இது மேலும் வளர வேண்டும். திருப்பூர் மாவட்டத்துக்கு இணையாக வளரவேண்டும். மாவட்டங்களுக்கு இடையே இத்தகைய ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். மாவட் டங்கள் வளர்ந்தால் தான் மாநிலம் வளரும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக மேடைக்கு வரும்முன் விழாவில் பங்கேற்ற பெண்களை சந்தித் துப் பேசியதுடன் அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முன்னதாக, கரூர் சுற்றுலா மாளிகையில் விவசாயி களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடினார்.
விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.பி ஜோதிமணி, மேயர் கவிதா, சட்டமன்ற உறுப் பினர்கள் குளித்தலை ரா.மாணிக்கம், கிருஷ்ண ராயபுரம் க.சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் பேசினர். ஆட்சியர் த.பிரபு சங்கர் வரவேற்றார். வருவாய் அலுவலர் ம.லியாகத் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment