டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் டி.ஆர்.எஸ். கட்சி உறுப்பினர் கள் முழக்கம்.
ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் வளர்ந்த திரவுபதி முர்மு, அந்த சித்தாந்தத்தில் இருந்து விடுபட்டு, குடியரசுத் தலைவராக அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் பொறுப்பினை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என் கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
அக்னிபாத் திட்டம் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததால், காங்கிரஸ், பி.எஸ்.பி. உறுப்பினர்கள் நாடாளு மன்ற பாதுகாப்புத்துறை குழு கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
2015 முதல் அரசாங்க வேலைகளை பெறும் மேனாள் படைவீரர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்.
மருத்துவக் கல்லூரிகளில் 92,000 பட்டப்படிப்பு இடங் கள் உள்ளன. இதில் தமிழ்நாடு 5225 இடங்கள் என்ற அள வில் முதலிடம் பெறுகிறது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மிகச் சிறிய அளவில் உள்ளதால், பாஜக பெரிய கட்சி போல தோற்றம் பெறுகிறது என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் பானு பிரதாப் மேத்தா.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment