கனடாவில் மம்மூத் வகை குட்டி யானையின் உடல் கண்டெடுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

கனடாவில் மம்மூத் வகை குட்டி யானையின் உடல் கண்டெடுப்பு

கனடாவின் வடக்கே உள்ள க்ளோண் டிக் தங்க வயல்களில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு அரிய வகை குட்டி மம்மூத்தின் உடலை கண்டெடுத்துள்ள னர். இந்த மம்மூத்திற்கு அந்த ஊர் மக்கள் Tr'ondek Hwech'in First Nation  என்று பெயரிட்டனர், அதாவது "பெரிய குழந்தை விலங்கு" என்று பெயர்

மம்மூத்கள் என்பவை இப்போதுள்ள யானைகளின் மூதாதைகள் என்கின்ற னர்,  வரலாற்று ஆய்வாளர்கள். இந்த வகை யானைகள் பனியுகத்தில் வாழ்ந் தவை. இப்போது உள்ள யானைகள் போல் அல்லாமல் மம்மூத் வகை யானை கள் உருவத்தில் மிகப்பெரியதாகவும் மிக நீண்ட தந்தங்களும் உடையவை. இப் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குட்டி மம்மூத் வகை யானைகள், பனியுகத் தில் வாழ்ந்தவை. பனிக்காலம் என்பதால் குளிரை தாங்கும் வண்ணம் இதன் உடலில் கம்பளி போன்ற ரோமங் கள் காணப் படுகின்றன.

மம்மூத்களின் உடல் முழுவதும் அடர்த்தியான உரோமங்களால் போர்த் தப்பட்டிருந்த காரணத்தால் இவை கம் பளி யானைகள் என அழைக்கப்பட்டன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மம் மூத்தானது அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் எல்லையான கனடாவின் யூகோன் பிரதேசத்தில் உள்ள டாசன் நகருக்கு அருகே அகழ்வாராய்ச்சி யின்போது குழந்தை மம்மூத்தின் எச் சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

30,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கம்பளி வகை மம்மூத்களும் இதனுடன் வேறு விலங்குகளான குதிரைகள், சிங்கங் கள் மற்றும் காட்டெருமைகளும் இருந்து உள்ளன என்று தெரிவிக்கின்றன. இந்த மம்மூத் வகை யானை பெண் என்று சொல்கின்றனர். 30,000 ஆண்டுகளுக்கு முன்பு, பனி யுகத்தின்போது இறந்திருக் கலாம் என்ற தகவல் வெளியாகி யுள் ளது. 1948ஆம் ஆண்டு அலாஸ்காவின் உட் புறத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் “எஃபி” என்ற பெயருடைய ஒரு பகுதி மம்மூத் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment