சென்னை, ஜூலை 2 சென்னை பார்வதி மருத்துவமனையில் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் பிற எலும்பு அடர்த்தி தொடர்பான நோய்களைக் விரைவாகவும் எளிதாக வும் கண்டறியும் நவீன டெக்சா (DEXA) ஸ்கேன் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது. பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணா நிதி (DEXA) ஸ்கேன் வசதியை திறந்து வைத்தார்.
இலவச டெக்சா ஸ்கேன் பரிசோதனை முகாமை தாம்பரம் மேயர் செல்வி கே.வசந்தகுமாரி தாம்பரம் துணை மேயர் ஜி.காமராஜ் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
இதுகுறித்து இம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.எஸ்.முத்துக்குமார், கூறுகையில், "முதியோர் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வயதில், இந்த காலகட்டத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுடன் தொடர்புடைய ஆஸ்டியோபோரோசிஸ் காரணமாக ஙிவிஞி கணிசமாகக் குறைகிறது.
டெக்சா ஸ்கேன் எலும்பின் தடிமன் மற்றும் போரோசிட்டியைக் காட்டுகிறது மற்றும் இடுப்பு, மூட்டு உட்பட உடலில் உள்ள அனைத்து எலும்புகளையும் சோதிக்கப் பயன்படுகிறது."
எலும்பு தாது அடர்த்தி மதிப்பீடு வயது, பாலினம், மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பரிசீலிக்கப்படலாம்.
டெக்சா இலவச பரிசோதனையை பொது மக்களுக்கும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் வருகின்ற ஜூலை 31, 2022 வரை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment