திரவுபதி முர்முவை நிறுத்தியிருப்பது பாஜகவின் அடையாள அரசியல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 3, 2022

திரவுபதி முர்முவை நிறுத்தியிருப்பது பாஜகவின் அடையாள அரசியல்

 நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் எச்சரிக்கை

மதுரை, ஜூலை 3- அடையாள அரசியலை முன்னிறுத்தும் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்முவை பழங்குடியினரின் பிரதி நிதியாக பார்க்க முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.     

மேலவளவு போராளிகள் 25ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் 30.6.2022 அன்று  மதுரை கோ.புதூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத் தைகள் கட்சி தலைவர்  தொல்.திருமாவள வன்  தலைமையில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் எழுச்சித் தமிழர்  தொல். திருமாவளவன் பேசியதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டி யிடும் திரளபதி முர்மு “அடையாள" அரசியலை முன்னிறுத்துகிறார். எனவே அவரை நாங்கள் ஆதரிக்கவில்லை.  திரவுபதி முர்முவை பட்டியல் பழங்குடியினரின் பிரதிநிதியாகப் பார்க்க முடியாது. அவர் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளார். காட்டுப் புலிகளும் சர்க்கஸ் புலிகளும் ஒன்றல்ல. காட்டு யானைகளும் கோவில் யானைகளும் ஒன்றல்ல. மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் ராம்நாத் கோவிந்த் முறையே முஸ்லிம் சமூகம் மற்றும் தாழ்த்தப்பட்ட ஜாதியினரை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இந்தியக் குடியரசுத் தலைவராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் உள்ளார். அவர் பொறுப்பி லிருந்தாலும்  நாட்டில் கவுரவக் கொலைகள் குறைய வில்லை. அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தார். அவர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம்தான். ஆனால், அவர் பொறுப்பிலிருந்த காலத்திலும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறைய வில்லை. திரவுபதி முர்மு ஏற்கனவே உள்ளாட்சி பிரதி நிதியாக இருந்துள்ளார். அமைச்சர் பொறுப்பை யும் வகித்துள்ளார். அவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பும் கூட அவரது கிராமத்திற்கு மின் வசதி இல்லை. இப் போது வழங்கப்போவதாகக் கூறுகிறார்கள். மற்றொருபுறத்தில் எங்களது அணியின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார். அவர் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால், மாநிலங்களில் ஆளுநர் பொறுப்பை வகிப்பவர்கள் தங்களது பதவியை தவறாகப் பயன்படுத்தி மாநில அரசுகளுடன் விளை யாடுவதை அனுமதிக்க மாட்டார் என்ற உறுதியை அளிக்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ். ஆபத்தான அமைப்பு

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்  (ஆர்எஸ் எஸ்) ஒரு ஆபத்தான அமைப்பாகும், அது “ஒரே இந்தியா, ஒரே கலாச்சாரம்” என்கிறது. 2024-ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் பாஜக மீண்டும்  தேர்ந்தெடுக்கப்பட்டால், அது அனை வருக்கும் சமத்துவத்தை உறுதி செய்யும் இந்திய அரசமைப்பை  மாற்றி மனுஸ்மிரு தியைக் கொண்டு வரும், இது இந்தியாவை 2 ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்லும். மோடி - அமித்ஷா  கொள்கைகள் அனைத்தும் ஹிட்லரின் கொள்கையை போன்றன. ஹிட்லர் ஜெர்மனியில் யூத மக்களை எப்படி கொன்று குவித்தாரோ அதேபோல்தான் ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல் பிற மதத்தை சேர்ந்த வர்களை அழித்தொழிக்க நினைக் கின்றது.  அரசமைப்புச் சட்டத்தை மாற் றுவதில் பாஜக வெற்றி பெற்றால், சமூக நீதி, இடஒதுக்கீடு, பெண்களுக்கான கல்வி  கேள்விக்குறியாகும். 

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.  


No comments:

Post a Comment