டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
‘நுபுர் சர்மா சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து நாட்டை தீக்கிரையாக்கி விட்டார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தி ஹிந்து:
வெறுப்பை வளர்ப்பதில் நூபூர் சர்மா மட்டுமின்றி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ. மற்றும் ஆர்எஸ்எஸ்.க்கும் பொறுப்பு உண்டு என்று ராகுல் காந்தி பேச்சு.
தி டெலிகிராப்:
சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடால்வட் கைது குறித்து சமூக ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள் தலைமை நீதிபதிக்கு விளக்கம் கேட்டு கடிதம். குல்பர்க் சொசைட்டி தீர்ப்பின் தாக்கம் குறித்த அச்சம், நரேந்திர மோடிக்கு கிளீன் சிட் கொடுத்தது என சந்தேகிக்கப்படுகிறது என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
சுயமரியாதைத் திருமணத்தை இரண்டு இந்துக்களுக்கு இடையே மட்டுமே நடத்த முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment