சென்னை, ஜூலை 13 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோவிட் தொற்றின் காரணமாக தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து நேற்று (12.7.2022) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், முதலமைச்சர் நலம் பெற விழைவுத் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்..
அதன் விவரம் வருமாறு:
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கரோனா தொற்றின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் உடல் நலம் பெற்று மக்கள் பணிக்குத் திரும்பிட விழைகிறோம்.
நலம் பெறுக!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
13.7.2022
No comments:
Post a Comment