டில்லி காவல்துறையில் காலியிடங்கள்
டில்லி காவல்துறையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம் : ஹெட் கான்ஸ்டபிள் (அசிஸ்டென்ட் வயர்லெஸ் ஆப்பரேட்டர், டெலி பிரின்டர் ஆப்பரேட்டர்) பிரிவில் ஆண்கள் 573, பெண்கள் 284 என மொத்தம் 857 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : கணிதம், அறிவியல் பிரிவில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். அடிப்படை கணினி (கம்ப்யூட்டர்) அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது : 1.7.2022 அடிப்படையில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : இணைய வழி எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, டிரேடு தேர்வு.
தேர்வு மய்யம் : சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர். இணைய வழியில் விண்ணப்பம்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. எஸ்.சி., / எஸ்.டி, பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 29.7.2022
விபரங்களுக்கு : https://ssc.nic.in/
கப்பல் கட்டும் நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்
பொதுத்துறையை சேர்ந்த கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம் : சூப்பர்வைசர் 33, இன்ஜின் டெக்னீசியன் 8, டிசைன் அசிஸ்டென்ட் 17 என மொத்தம் 58 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : சில பதவிகளுக்கு இன்ஜினியரிங் டிப்ளமோ, சில பதவிகளுக்கு டிகிரி தேவைப்படும்.
வயது : 1.7.2022 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை : இணையம்
விண்ணப்பக்கட்டணம்: ரூ.400. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள் : 28.7.2022
விபரங்களுக்கு : https://grse.in/
அழைக்கிறது இந்தியன் ஆயில் நிறுவனம்
இந்தியன் ஆயில் தென் மண்டலத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம் : ஜூனியர் ஆப்பரேட்டர் (ஏவியேஷன்) பிரிவில் 39 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : குறைந்தது 45 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். கனரக வாகனம் இயக்குவதில் ஓராண்டு அனுபவம் அவசியம்.
காலியிடம் : தமிழகத்தில் 28, தெலுங்கானா 5, கர்நாடகா 6 என மொத்தம் 39 இடங்கள் உள்ளன.
வயது : 30.6.2022 அடிப்படையில் 18 - 26 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு. எழுத்துத்தேர்வு தேதி : 21.8.2022
இணைய வழியில் விண்ணப்பிக்க கட்டணம் ரூ. 150, கடைசிநாள் : 29.7.2022
விவரங்களுக்கு : லீttஜீs://வீஷீநீறீ.நீஷீனீ/றீணீtமீst-ழீஷீதீ-ஷீஜீமீஸீவீஸீரீ
No comments:
Post a Comment