சென்னை, ஜூலை 25- அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் குறித்தும், ஆவ ணங்கள் கொள்ளை போனதாக அளிக்கப் பட்ட புகாரைத் தொடர்ந் தும் புகாருக்குள்ளான ஓ.பன்னீர்செல்வம் மீது எத்தகைய சட்ட நடவ டிக்கை எடுப்பது என்பது குறித்து சட்ட நிபுணர்க ளுடன் காவல் அதிகாரிகள் ஆலோசித்து வரு கின்றனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த 11ஆம் தேதி நடை பெற்றது. அன்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், தன் ஆதரவாளர்களுடன் சென்றார். கே.பழனிசாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் தரப்பினர் உள்ளே செல்லாதபடி வெளியே காவலுக்கு நின்றனர்.
அப்போது, ஓபிஎஸ் தரப்பினர் பூட்டியிருந்த அலுவலக கதவை உடைத்து உள்ளே சென்றதாக கூறப் படுகிறது. இரு தரப்பின ருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 400 பேர் மீது ராயப்பேட்டை காவல் நிலைய காவல் துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசா ரணை மேற்கொண்டுள்ள னர். இதற்கிடையே அதி முக தலைமை அலுவலகத் துக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் நீதிமன் றம் வரை சென்றது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக அலுவலகத்துக்கு வைக் கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டு, சாவியை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரான கே.பழனிசாமியிடம் ஒப் படைக்க உத்தரவிட்டது. அதன்படி சீல் அகற்றப் பட்டு சாவியும் ஒப்படைக் கப்பட்டது.
பின்னர் அதிமுக அலு வலகத்தில் கட்சியினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அலுவலகத் தில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போனது தெரியவந்தது. எனவே முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப் பட் டிருப்பதாக அதிமுக மேனாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் தலைமை அலு வலகம் பூட்டிக்கிடப்பதை பார்த்த ஓ.பன்னீர்செல் வம் மற்றும் அவருடன் வந்தவர்கள் அடியாட்க ளுடன் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென் றுள்ளனர். பின்னர், அலு வலகத்தை சூறையாடி, அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்கள், முக்கிய ஆவ ணங்களை ஓ.பன்னீர் செல்வமும், அவருடன் வந்தவர்களும் கொள் ளையடித்துச் சென்று விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்தப் புகாரில் குறிப் பிடப் பட்டிருந்தபடி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 300 பேர் மீது மேற்கொள்ள வேண் டிய அடுத்த கட்ட நட வடிக்கை, வழக்குப் பதிவு செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் காவல் அதிகாரிகள் ஆலோ சித்து வருகின்றனர்.
சட்ட நிபுணர்களின் பரிந்துரைப்படி அடுத்தக் கட்ட நடவடிக்கை இருக் கும் என காவல் அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். மோதலில் ஈடுபட்டவர்க ளின் பட்டியல் ஏற்கெ னவே காவல்துறையினரி டம் உள்ளது குறிப்பிடத் தக்கது. காட்சிப் பதிவு களை ஆராய்ந்து விவரங் களை காவல்துறையினர் சேகரித்து வைத்துள்ளனர்.
இரு தரப்பைச் சேர்ந்த 400 பேர் மீது ராயப் பேட்டை காவல்துறையினர் 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment