கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்ட ணம் சீரிய பெரியார் பற்றா ளரும், திராவிடர் கழக ஆதரவாளரும், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், தமிழர் தலைவர் ஆசி ரியர் ஆகியோர் மீது பேரன்பு கொண்டவரும் நாகரசம்பட்டி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியரும், நல்லா சிரியர் விருது பெற்றவரும், நாகரசம்பட்டி பெரியார் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலையை நிறுவி திறப்பு விழா கண்ட வருமான, தொடர் விடுதலை நாளிதழ் வாசகருமான பெரும் புலவர் எ.வே.திருவரசன் (வயது 91) 19.7.2022 அன்று பிற்பகல் 12.45 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அன்னாரது மறைவு செய்தி அறிந்ததும் திராவிடர் கழகம் சார்பில் பெ.மதிமணியன், பொதுக்குழு உறுப்பி னர்கள் கோ.திராவிடமணி, தா.சுப்பிரமணியம், ஒன்றிய தலைவர் பெ.செல்வம்,ஒன்றிய செயலாளர் பெ.செல் வேந்திரன், அமைப்பாளர் சி.ராஜா, மேனாள் ஒன்றிய தலைவர் சி.சீனிவாசன், மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் வே.புகழேந்தி உள்ளிட்ட கழகத் தோழர்கள் நேரில் சென்று மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர்.
அவரது உடல் அடக்கம் நாகரசம்பட்டி அருகிலுள்ள எருமாம்பட்டி கிராமத்தில் அவரது தோட்டத்தில் நேற்று (20.7.2022) மாலை 3.00 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment