சென்னை, ஜூலை 28- சென்னையில் பழைமை வாய்ந்த முக்கிய ரயில் நிலையங்களான எழும்பூர், சென்ட்ரலில் முன்பதிவு பயணச்சீட்டு கவுண்டர் குறைப்பால் லட்சக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய எழும்பூரில் 8 முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட்டு வந்தது. அதேபோல் சென்ட்ரல் நிலையத்தில் 10 முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட்டன. இதன் மூலம் பயணிகளுக்கு முன்பதிவு பயணச்சீட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கணினி பழுது, ஊழியர்கள் பற்றாக்குறை என பல்வேறு கவுண்ட்டர்கள் மூடப்பட்டது. தானியங்கி பயணச்சீட்டு எந்திரம், அலைபேசி செயலி மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின் மேலும் சில கவுண்டர்கள் மூடப்பட்டது. அதே போல முன்பதி வில்லா பயணச்சீட்டு விநியோக கவுண்டர்களும் ஊழியர்கள் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு விட்டது. இதனால் பயணச்சீட்டு எடுக்க காலதாமதம் ஏற்படுகிறது.
No comments:
Post a Comment