திருச்சி: மகளிரணி - மகளிர் பாசறை - கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 4, 2022

திருச்சி: மகளிரணி - மகளிர் பாசறை - கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்

 இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வினர்   ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள் என்றால் எல்லாம் வித்தைதான்!

இந்தி பேசுகின்ற மாநிலங்களில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு வரவில்லை - அதனால் அவர்களின் வித்தைகள் அங்கே எடுபடுகின்றன

வடமாநிலங்களின் வளர்ச்சிக்குத் தேவை இன்றைய 'திராவிட மாடல்' ஆட்சிதான்!

திருச்சி, ஜூலை 4 இன்றைக்கு காவிக்கட்சியினர் ஆட் சிக்கு வந்துவிட்டார்கள் என்று சொன்னால், எல்லாம் வித்தைதான். இந்தி பேசுகின்ற மாநிலங்களில் உள்ள மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வரவில்லை.  அத னால்தான் அவர்களுடைய வித்தைகள் அங்கே எடுபடுகின்றன. வட மாநிலங்களுக்கே இப்பொழுது திராவிட மாடல், திராவிடம்தான் தேவைப்படுகிறது. என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

திருச்சியில் கடந்த 12.6.2022 அன்று திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறையின் சார்பில் நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

சனாதனம் என்றால் என்ன?

சனாதனம் என்றால் என்ன? இருப்பது அப்படியே நீடிக்கவேண்டும். 

இருப்பது அப்படியே நீடித்திருந்தால், இவர் எழுத் தாணியை அல்லவா கையில் வைத்திருக்கவேண்டும். பேனாவை பயன்படுத்துகிறாரே, முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒரு பயலுக்காவது பேனா தெரியுமா?

எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறீர்களே, உங் களுடைய சனாதனமா செல்போனைக் கண்டுபிடித்தது.

வீடியோவைப் பார்க்கிறீர்கள்; போனை எடுத்து ஹலோ என்று சொல்கிறீர்கள் - இதைக் கண்டுபிடித்தது உங்கள் அத்திம்பேரா?

மாற்றம் ஒன்றுதான் மாறாதது

புத்தர் சொன்னார் ஒரு பக்கத்தில் - இன்னொரு பக்கத்திலே காரல் மார்க்ஸ் சொன்னார்.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது. இதுதானே அறிவு.

மாறாதது என்று சொல்லிக் கொண்டு, நீ மாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றாயே, நீ வெட்கப்பட வேண்டாமா? உனக்கு சிந்தனை ஆற்றல் இல்லாததால், கலவரத்தை உண்டாக்குகிறாய்.

அதேபோன்றதுதான் கீதை,

சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் -

நான்கு ஜாதிகளை நானே உண்டாக்கினேன்

அந்தத் தருமத்தை, எந்த தருமத்தை, ஜாதி தருமத்தை - ஜாதி தர்மம் என்றால் என்ன? என்று சொல்லிவிட்டு,

நோய்க் கிருமியை ஒழிக்காமல், 

நோயை ஒழிக்க முடியாது

நாங்கள் யாரைத் தாக்குகிறோம் - எங்களுடைய புண் - எங்களுடைய நோய் - அந்த நோயை உண்டாக்குகின்ற கிருமி எது? அந்தக் கிருமியைக் கண்டுபிடிக்கவேண்டும்; கிருமியை அழிக்காமல், நோயை மட்டும் சரி செய்யவேண்டும் என்று நினைத்தால், அந்த நோய் மீண்டும் மீண்டும் வரும்.

கரோனா தொற்று அதுதானே - கரோனாவை ஒழித்தால், டெல்டா வைரஸ் - டெல்டா வைரஸ் என்றால், ஒமைக்ரான் என்று சொல்கிறார்கள்.

இப்போது பிராமினோகிரான் வருகிறது - மேற்சொன்னதைவிட மோசமானதாகும்.

மனு தர்மம் என்ன கூறுகிறது?

சனாதன தர்மம் என்றால் என்ன தெரியுமா? மனுதர்மம்.

‘‘பிராமணனுக்கு ஓதுவித்தல் ஓதல் எக்கியஞ் செய்தல் எக்கியஞ் செய்வித்தல் தானங் கொடுத்தல் தானம் வாங்குதல் ஆகி இவ்வாறு தொழிலையும் ஏற்படுத் தினார்.’’

அடுத்து ஒவ்வொரு ஜாதிக்கும் தர்மம் - அதுதான் சனாதன தர்மம். இந்தக் காலத்தில் ஏற்றுக் கொள்ளலாமா?

‘‘க்ஷத்திரியனுக்கு பிரசைகளைத் தருமமாகக் காத்தல் தனங் கொடுத்தல் வேதமோதுதல் பாட்டு கூத்து ஸத்திரி முதலிய விஷயங்களில் மநஞ் செல்லாமை இவை நான்கையும் ஏற்படுத்தினார். எக்கியஞ் செய்தல் முதலான தருமகாரியங்களும் அவனுக்குண்டு.’’

‘‘வைசியனுக்கு பசுவைக் காப்பாற்றுதல் தானங் கொடுத்தல் ‘வேதமோதுதல் சலத்திலும் பூமியிலு முண் டான இரத்தினம் நெல்லு முதலியவைகளின் வியாபாரஞ் செய்தல் வட்டி வாங்குதல் பயிரிடுதல் இவ்வாறையும் ஏற்படுத்தினார்.’’

‘‘சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான தருமமாக ஏற்படுத்தினார்.’’

இதுதான் சனாத தர்மம் - இதுதான் குலதர்மம்.

நாங்கள் எல்லாம் காலங்காலமாக அடிமையாக இருக்கவேண்டும்.

சூத்திரனுக்கு என்று சொன்னவுடன், சூத்திரனுக்குக் கீழே பஞ்சமன் - பஞ்சமனுக்குக் கீழே எல்லா ஜாதிப் பெண்களும்.

காலங்காலமாக அடிமையாக இருக்கிறார்களே, பெண்கள் - அந்தப் பெண்களுடைய உணர்ச்சிக் குரல்தான் தோழர்களே, இந்தப் பகுதியிலே இன்றைக்கு ஒரு சாதாரண ஒலி முழக்கம்.

இவ்வளவுதானே தவிர, நாங்கள் ஒன்றும் கடவுள் எங்களோடு வந்தார்; கூப்பிட்டார், டீ சாப்பிடமாட்டோம் என்று சொல்லிவிட்டோமா? அல்லது கடவுளுக்கும், எங்களுக்கும் வாய்க்கால், வரப்பு தகராறா? கடவுளைப் பற்றி பேசினால் எங்களுக்கு என்ன லாபம்? என்று நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள்.

தேடப்படுகிற குற்றவாளிகள் 

காவிக் கட்சியில் சேருகிறார்கள்

ஒன்றுமே தெரியாத, எதற்குமே லாயக்கில்லாத - பல நேரங்களில் தேடப்படுகிற குற்றவாளிகள் எல்லாம் ஆதீனமாக மாறிக் கொண்டிருக்கக்கூடிய அளவிற்கு வசதியும், வாய்ப்பும் காவிக் கட்சியில் இருக்கிறது.

காவிக் கட்சி என்று ஒரு கட்சி இருக்கிறது. அந்தக் கட்சியில், காவல்துறையால் தேடப்படுகிற வர்கள் சேருகிறார்கள். காவல்துறை, அந்தத் தலை வருக்கு அதிகாரமா, காவல் அதிகாரி இருக்கிறார், அவருடைய கடமையை செய்வதற்கு.

அங்கே தேடப்படுகின்ற குற்றவாளிகள் கட்சி யில் சேர வரும்பொழுது, காவல்துறை அதிகாரி யைப் பார்த்தவுடன் ஓடுகிறார்கள்.

இதுதான் பாரதீய ஜனதா கட்சிக்கு மிகச் சிறப்பு. இந்த சம்பவம் எங்கே நடந்தது என்றால், கூடுவாஞ்சேரியில்.

இதற்காக என்மீது வழக்குப் போட்டால், அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.

யார் எதிர்க்கட்சி என்பதில்தான் சண்டை

எதிர்க்கட்சிகளுக்குள் இப்பொழுது சண்டை நடக் கிறது. ஆனால், ஒன்றை எதார்த்தமாகப் புரிந்துகொண் டிருக்கிறார்கள். அது என்னவென்றால், நான் எதிர்க் கட்சியா? நீ எதிர்க்கட்சியா?

இப்பொழுது அ.தி.மு.க.விற்கும், பா.ஜ.க.விற்கும் சண்டை.

நிச்சயமாக அவர்களுக்குத் தெரிந்து போயிற்று, இந்த இரண்டு கட்சிகளுக்கும், தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சி இருக்கின்ற வரையில், இனிமேல் ஆளுங் கட்சியாக வர முடியாது என்று தெரிந்துவிட்டது.

எனவே, ஆளுங்கட்சிக்காக அவர்கள் சண்டை போடவில்லை. யார் எதிர்க்கட்சி என்பதில்தான் சண்டை போடுகிறார்கள் என்பதிலிருந்தே, முதல் வெற்றி - ‘திராவிட மாடலை’ அசைக்க முடியாது - ஒன்றும் செய்ய முடியாது.

கடவுளைப்பற்றி பேசுவார், அதனைத் தடுங்கள் என்று சொல்வார்கள்

ஆகவே நண்பர்களே, உங்களுக்குத் தெளிவாகச் சொல்கிறோம் - திராவிடர் கழகக் கூட்டம் என்றவுடன், அவர் மதக் கடவுளைப்பற்றி பேசுவார் - உடனே அதைத் தடுங்கள் என்று அவர்கள் காவல்துறையினரிடம் சொல்வார்கள்.

காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள் பாவம் - அவர்களைப் பார்த்து நாங்கள் பரிதாபப்படுகிறோம்.

கடவுளைப்பற்றி பேசாதீர்கள் என்கிறார்கள்.

பகுத்தறிவைப்பற்றித்தானே பேசுகிறோம். கடவுள் தான் எங்களை சூத்திரனாக இருக்கச் சொன்னார் என்றால், அந்தக் கடவுள் எங்களுக்கு வேண்டுமா? அந்தக் கடவுளை விட்டு வைக்க வேண்டுமா?

அந்தக் கடவுள்தான் கீதையில் சொல்கிறாராம் - எந்தத் தருமத்தை மாற்றினாலும், இந்து தருமத்தை மாற்ற முடியாது என்று.

முத்தமிழறிஞர் கலைஞருக்கு 

இராம.கோபாலன் கொடுத்த புத்தகம்

ஆகவே, அதைப் பரப்பவேண்டும் என்று பார்ப் பனர்கள் நினைக்கிறார்கள். இந்து முன்னணி தலைவர் மறைந்த இராம.கோபாலன் அவர்கள், கீதையின் மறுபக்கம் நூல் பரவிக் கொண்டிருந்த நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய வீட்டிற்கு வருகிறார் என்று சொல்கிறார்கள்.. தி.மு.க. தோழர்களுக்கு ஏதோ கலவரம் நடக்கப் போகிறது என்று நிறைய தோழர்கள் கூடிவிட்டனர்.

அப்பொழுது கலைஞர் அவர்கள் வெளியில் சென் றிருக்கிறார். இராம.கோபாலன் வருகிறார் என்றவுடன், கோபாலபுர வீட்டிற்கு வருகிறார் கலைஞர் அவர்கள்.

தி.மு.க. தோழர்கள் நிறைய பேர் இருப்பதைப் பார்த்தவுடன், என்னவென்று கேட்டார்.

இராம.கோபாலன் வருகிறார் என்று சொல்லியி ருக்கிறார்; ஏதாவது பிரச்சினைகள் வருமோ என்பதற் காகத்தான் நாங்கள் எல்லாம் வந்திருக்கின்றோம் என்று சொன்னார்கள்; காவல்துறையினரும் சொன்னார்கள்.

உடனே கலைஞர் அவர்கள் சிரித்துக்கொண்டே, ‘‘என்னை சந்திக்கத்தானே வருகிறார்; தாராளமாக வரட்டும்; சங்கராச்சாரியார் வந்தாலும் சந்திக்கலாம். அதிலொன்றும் சங்கடமில்லை. நான் பார்த்துக் கொள் கிறேன், தோழர்கள் எல்லாம் கலைந்து செல்லுங்கள் என்றார்.

இதுதான் திராவிட இயக்கம். நாங்கள் கலவரத்திற்கு அடிப்படையை உருவாக்க மாட்டோம். அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது என்றால், அதுதான் காரணம்.

இராம.கோபாலன் வந்தவுடன், மாடிக்கு அனுப்புங்கள் என்றார் கலைஞர்.

இராம.கோபாலன் அவர்களும் மேலே சென்று, கலைஞரைப் பார்த்து ‘நமஸ்காரம்‘ என்றார்.

கலைஞர் அவர்கள், ‘வணக்கம்‘ என்றார்.

ஏனென்றால், இரண்டு கலாச்சாரம் - 

அது ஆரிய மாடல் - இது திராவிட மாடல்.

அப்பொழுது இராம.கோபாலன் அவர்கள், உங் களைப் பார்த்து ஷேமத்தை விசாரிச்சிட்டு, அதற்குப் பிறகு புஸ்தகத்தைக் கொடுப்பதற்காக வந்திருக்கிறேன் என்றார்.

ரொம்ப மகிழ்ச்சி; நான் நிறைய புத்தகங்களைப் படிப்பேன்; எல்லா புராணங்களையும் படிப்பேன் என்று கலைஞர் சொன்னார்.

பகவத் கீதை புத்தகத்தை இராம.கோபாலன் அவர் கள் கலைஞரிடம் கொடுத்தார்.

அதை மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டார் கலைஞர் அவர்கள்.

இராம.கோபாலனுக்கு கலைஞர் கொடுத்த கீதையின் மறுபக்கம் புத்தகம்!

எனக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறீர்கள் அல்லவா - இப்பொழுது உங்களுக்கு நான் ஒரு புத்தகம் கொடுக்கிறேன் என்று சொல்லி, மேசை டிராயரைத் திறந்து, ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்து, இந்தப் புத்தகத்தைப் படியுங்கள் என்றார்.

என்ன புத்தகம் என்றால்,  ‘‘கீதையின் மறு பக்கம்‘‘ வீரமணி எழுதியது.

அந்தப் புத்தகத்தை இராம.கோபாலன் வாங்கிக் கொண்டதும்,

வீரமணி கீதையைப்பற்றி எழுதியிருக்கிறார்; அவர் நிறைய தப்பும், தவறுமாகக்கூட எழுதி யிருப்பார். நீங்கள் அந்தத் தவறைக் கண்டுபிடித்து எழுதுவதற்கு வசதியாக இருக்கும் என்று சொன் னார்.

அன்றைக்குப் போனவர்தான் - இன்றைக்கு அவர் உயிரோடு இல்லை. இறந்தவரைப்பற்றி நான் குறைவாக சொல்லமாட்டேன். அதுதான் மனிதநேயம்.

நாங்கள் இருவரும் ரயில் பயணத்தின்போது எதிரே திரே சந்திக்கும்பொழுதுகூட நலம் விசாரித்துக் கொள் வோம்.

எதற்காக இதை சொல்கிறேன் என்றால், கீதையின் மறுபக்கம் நூலுக்கு இதுவரை யாரும் மறுப்பு எழுத வில்லை.

நமக்கொன்றும் தனிப்பட்ட முறையில் எந்தக் கட வுளின் மேலோ, மதத்தின்மேலோ வெறுப்பு கிடையாது.

மற்ற மாநிலங்களில் எப்படிப்பட்ட நிலைமை இருக்கிறது என்பதைப்பற்றி இங்கே உரையாற்றியவர்கள் எல்லோரும் சொன்னார்கள்.

ஒருவரின் பொறுப்பற்ற பேச்சினால், கலவரம் வெடிக்கக்கூடிய அளவில் இருக்கிறது

இன்றைக்கு நமக்குப் பெரும்பாலான வேலை வாய்ப்பு என்றால், துபாய், அரபு நாடுகளுக்குத்தான் போகிறோம். பெட்ரோலை அங்கே இருந்துதான் இறக்குமதி செய்கிறோம்.

இறக்குமதியில் மூன்றாவது பெரிய அளவிற்கு இந்தியப் பொருளாதாரத்தில் இருக்கிறது. இவை அத்தனையும் ஒருவரின் பொறுப்பற்ற பேச்சினால், கலவரம் வெடிக்கக்கூடிய அளவில் இருக்கிறது. இதுவரையில் பிரதமர் அதிகாரபூர்வமாக கண் டிக்கவேயில்லை.

அவற்றையெல்லாம் தவிர்க்கவேண்டும்; தமிழ்நாடு தான் அமைதிப்பூங்காவாக இருக்கிறது என்று சொல் லும்பொழுது, தமிழ்நாட்டில் இருக்கின்ற ஓர் ஆளுநர், இங்கே அமைதிக்கு  பங்கம் ஏற்படும் வகையில், கல வரம் வந்தால், வன்முறையை சமாளிக்கலாம் என்று சொன்னால், என்ன அர்த்தம்?

முழுக்க முழுக்க இது ஆர்.எஸ்.சினுடைய குரல். மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம் இந்தியா விலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தவிர வேறு இயக்கம் உண்டா?

இன்றைக்கு வட மாநிலங்களில் 

திராவிட மாடல், திராவிடம் தேவைப்படுகிறது

இன்றைக்கு அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள் என்று சொன்னால், எல்லாம் வித்தைதான். இந்தி பேசு கின்ற மாநிலங்களில் உள்ள மக்களுக்கு இன்னும் விழிப் புணர்வு வரவில்லை.  அதனால்தான் அவர்களுடைய வித்தைகள் அங்கே எடுபடுகின்றன.

வட மாநிலங்களுக்கே இப்பொழுது திராவிட மாடல், திராவிடம்தான் தேவைப்படுகிறது.

லக்னோவிலிருந்து வந்த மின்னஞ்சல் கடிதம்

நேற்று எனக்கு மின்னஞ்சல்மூலம் ஒரு கடிதம் வந்திருக்கிறது. எங்கே இருந்து என்றால், உத்தரப்பிரதேச தலைநகரம் லக்னோவிலிருந்து வந்திருக்கிறது.

அந்தக் கடிதத்தில் உள்ளவற்றை அப்படியே சொல்கிறேன். ஏற்கெனவே தொலைபேசிமூலம் வட நாட்டிலிருந்து என்னிடம் பேசினார்கள். அவர் பேசு கின்ற ஆங்கிலத்தை என்னால் புரிந்துகொள்ள முடிய வில்லை. ஏனென்றால், இந்தி பேசுகின்றவர்களுடைய ஆங்கிலம் கொஞ்சம் சிக்கலாக இருக்கும். அவருடைய குரலும் சரியாக எனக்கு விளங்கவில்லை.

(தொடரும்)


No comments:

Post a Comment