தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 3, 2022

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை, ஜூலை 3 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வ தற்கான புதிய வழிகாட்டு நெறி முறைகளை பள்ளிக்கல்வி ஆணை யர் வெளியிட்டுள்ளார். 

அரசுப்பள்ளிகளில் காலியாக வுள்ள 13 ஆயிரத்து 300 பணியிடங் களில் தற்காலிக ஆசிரியர்களை பணிநியமனம் செய்வதற்கான வழி காட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வி ஆணையர் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரி யர்கள் மற்றும் முதுகலை ஆசிரி யர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

இந்த பணிநியமனங்களை அந் தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாகக்குழுவே மேற்கொள் ளலாம் என்றும் தெரிவிக்கப்பட் டிருந்தது. இதையடுத்து உரிய விதி முறைகளைப் பின்பற்றாமல் அவ ரவர் விருப்பத்திற்கேற்ப ஆசிரியர் களை நியமனம் செய்வதாக புகார் கள் எழுந்தன. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த நிலை யில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அடிப்படையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார். 

அதில் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி கல்வித்தகுதி அடிப்படையில் சரியான முறையில் இந்த பணிநியமனங்களை மேற் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

அதன்படி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலியாக இருக்கக்கூடிய விவரங்களை எல்லாம் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை 4ஆம்தேதி முதல் 6ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப் பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. 

விண்ணப்பதாரர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட் டார கல்வி அலுவலர்கள் மூலமாக நேரிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை எல்லாம் ஆய்வு செய்து 6ஆம் தேதி இரவு 8 மணிக் குள்ளாக அனைத்து விண்ணப்பங் களின் விவரங்களையும் பள்ளிக் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டு மென்று தெரிவிக்கப்பட்டுள் ளது. 

மேலும் இந்த சுற்றறிக்கையில், தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணி திருப்தியளிக்க வில்லை என்றால் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படு வார்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment