உதய்பூர் படுகொலை: பா.ஜ.க.வுக்குத் தொடர்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

உதய்பூர் படுகொலை: பா.ஜ.க.வுக்குத் தொடர்பு

ஜெய்ப்பூர், ஜூலை 2 ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கண்ணையா லால் படுகொலை சம்பவம் தொடர்பாக கைது செய் யப்பட்ட கொலையாளிக்கும் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு நிர்வாகிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந் துள்ளது.

இந்த படுகொலை தொடர்பாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் குறித்த விசாரணையில் ரியாஸ் அட்டாரி மற்றும் முகமத் கவுஸ் ஆகிய இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர். 

படுகொலை சம்பவத்தின் போது பயன்படுத்திய ஆர்.ஜெ. 27 எ.எஸ். 2611 என்ற பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு ரியாஸ் வாங்கியுள்ளார். இதில் உள்ள 2611 என்பது மும்பையில் நடைபெற்ற தாக்குதல் தேதியான 26/11 அய் குறிக்கும்வகையில் வாங்கியதாக கூறப்படுகிறது.

தாலிபான்கள் போன்று ராஜஸ் தானிலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் திட்டத்தோடு செயல்பட்டு வந்த இவருடன் பத்தாண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.க.வில் இருந்து வரும் இர்ஷத் சைன்வாலா தொடர்பில் இருந்துள்ளார்.

2019ஆம் ஆண்டு சவுதி அரேபியா சென்று வந்த ரியாஸை வரவேற்றுள் ளார் இர்ஷத் சைன்வாலா அது தொடர்பான ஒளிப்படத்தையும் இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.

தவிர, பா.ஜ.க. வின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மற்றொரு நண்ப ரான முகமது தாஹிர் உடன் பா.ஜ.க. கூட்டங்களிலும் ரியாஸ் கலந்து கொண்டதாக சைன்வாலா தெரிவித்துள்ளார்.

கண்ணையாலால் படுகொலை யில் கைது செய்யப்பட்ட நபர் களுக்கும் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு நிர்வாகிகளுக்கும் இடையே இருந்த தொடர்பு குறித்து வெளியான இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment