சென்னை, ஜூலை 23 தமிழ்நாடு அரசு சார்பில் திருச்சி மற்றும் சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மய்யங்கள் அமைக்க நட வடிக்கை எடுத்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் செயற்கை கருத்தரித்தல் மய்யங்களை கட்டுப்படுத்த மற்றும் அதன் நடவடிக்கைகளை கண் காணிப்பதற்கு, செயற்கை இனப்பெருக்க நுட்பங்கள் சட்டம், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம், கருத்தரிப்பு முன் மற்றும் பிறப்புக்கு பின் நோய்களைக் கண்டறியும் நுட்பங்கள் என்ற சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களின் தேவைகள் மற்றும் அவற்றின் தாக்கம், சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குநர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் செயற்கை கருத்தரித்தல் முறைகேட்டில் ஈடுபட்ட 4 மருத்துவமனைகள் மீது கடந்தவாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் செயற்கை கருத்தரித்தல் மய்யங்களில் நடைபெறும்முறைகேடுகள், விதிமீறல்களை கட்டுப்படுத்த, திருச்சி மற்றும் சென்னையில் அரசு செயற்கை கருத்தரிப்பு மய்யங்கள் அமைப்பதற்கான நடவடிக்கையை தொடங்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment