புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆராய்ச்சி கல்வித் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 25, 2022

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆராய்ச்சி கல்வித் திட்டம்

சென்னை, ஜூலை 25 சென்னையிலுள்ள சிமேட்ஸ் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங்  நிறுவனம் நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.  

இந்த நிறுவனத்தில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், "பயோரிசோர்ஸ் டெக்னாலஜி" போன்ற மதிப்புமிக்க பன்னாட்டு பத்திரிகைகளில் புதுப் பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தங்கள் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக காப்புரிமை பெற்று பல வெளி யீடுகளை வெளியிட்டுள்ளனர்.

"டாக்டர். ஏ.எஸ். விக்ரம் மற்றும் டாக்டர். எஸ். மணி கண்டன் ஆகிய இரண்டு பேராசிரியர்கள், "ஆக்ஸிடோ ரேடக்டேஸ் என்சைம்கள் மூலம் தொழில் துறை கழிவுநீரில் இருந்து வெளியேறும் மாசுபடுத்தல் களின் உயிரியக்க மாற்றத்தில் முன்னேற்றங்கள்" என்ற தலைப்பில் ஆய்வுத் துறையில் பங்களிப்பாக சமீபத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டனர்.


No comments:

Post a Comment