சென்னை,ஜூலை 3- தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட படிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற் படிப்பு மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப் படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) படிப்புகளும் நடத்தப்படுகின்றன.
பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை),எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் மற்றும் ஏ.எல் படிப்புகள் தமிழ்நாடு அரசின் அங்கீகாரத் துடன் நடைபெறுகின்றன.
கடந்த 20ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநி யோகிக்கப்படுகின்றன.
அஞ்சல் மூலம் விண்ணப்பங்களைப் பெற விண் ணப்பக் கட்டணத்துக்கான ரூ.200/-(SC/ST Ï.100/-) வங்கி வரைவோலையை “The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai” என்ற பெயரில் எடுத்து பதிவுத் அஞ்சல்/ விரைவு அஞ்சல்/ கூரியர் மூலம் அனுப்பி வைக்கலாம். தொழிலாளர் மேலாண்மை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 7ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை) இரா.ரமேஷ்குமாரை 9884159410 என்ற அலை பேசி எண்ணிலும், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலை யம், மின்வாரிய சாலை, மங்கள புரம் (அரசு அய்டிஅய் பின்புறம்), அம்பத்தூர், சென்னை-600098 என்ற முகவரி யிலும், 044-29567885/29567886 என்ற எண்களிலும் தொடர்புகொள்ளலாம்.
ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி
பெங்களூரு, ஜூலை 3 ஆளில்லாத போர் விமானத்தை இயக்கும் பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது என்று ஒன்றிய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது.
முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஆளில்லா போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் முக்கிய வெற்றியாக, கருநாடக மாநிலம் சித்ரதுர்கா விமானப்பயிற்சி தளத்தில் நேற்று முன்தினம் (1.7.2022) முதல் ஆளில்லா போர்விமானம் சோதித்து பார்க்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை டிஆர்டிஓ அதிகாரிகள் செய்திருந்தனர். தன்னிச்சையாக பறந்து இலக்குகளை சரியாக தாக்கும் அளவுக்கு இந்த ஆளில்லா விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். விமானம் தரையிலிருந்து வானில் பறந்தது, வழிகாட்டிக்கான நடைமுறைகளை கையாண்டது, கீழே இறங்கியது என அனைத்தும் சுமூகமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து திட்ட அதிகாரிகளுக்கு டிஆர்டிஓ தலைவரும், பாதுகாப்புத்துறை (ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி) செயலர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி பாராட்டு தெரிவித்தார்.
கரோனா பேரிடர் காலத்தில் மறைந்த
35 பத்திரிகையாளர்களின்
குடும்பங்களுக்கு நிதியுதவி
புதுடில்லி, ஜூலை 3 கரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்.
ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா தலைமையிலான பத்திரிகையாளர் நலத்திட்டக்குழு, மறைந்த பத்திரிகையாளர்கள் 35 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு அளித்த பரிந்துரையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டது. மொத்தம் ரூ.1.81 கோடி நிதியுதவி வழங்க இக்குழுவின் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி பத்திரிகையாளர்கள் நல நிதியிலிருந்து 7 பத்திரிகையாளர்கள் மற்றும் 35 பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
நிரந்தர உடல்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 2 பத்திரிகையாளர்கள், பெரிய நோய்களுக்கு சிகிச்சைபெறும் 5 பத்திரிகையாளர் குடும்பங்களுக்கும் நிதியுதவி அளிக்க இக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த 16 பத்திரிகையாளர் குடும்பங்களும் அடங்கும். இவர்களுக்கு பத்திரிகையாளர் நலத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த 123 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு இதுவரை ஒன்றிய அரசு நிதியுதவி வழங்கியுள்ள நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரெடிட் கார்டு: புதிய விதி முறைகள்
புதுடில்லி, ஜூலை 3- கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டுகள் மீது புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது. இந்த விதிமுறைகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) முதல் அமலானது.
அனைத்து வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) ஆகியன வழங்கியுள்ள கடன் அட்டைகளுக்கு இந்த விதி பொருந்தும்.
வாடிக்கையாளருக்கு தெரிவிக்காமல் அவரது கடன் அட்டை வரம்பை உயர்த்துவது, புதிய கடன் அட்டை அளிப்பது போன்ற நடவடிக்கையில் வங்கிகள் ஈடுபடக் கூடாது. அவ்விதம் ஈடுபட்டால், இதற்காக வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்துடன் அபராதத் தொகையை சேர்த்து வாடிக்கையாளர் கணக்கில் வழங்க வேண்டும்.
அதேபோல இலவச கடன் அட்டை மீது மறைமுக கட்டணங்கள் எதுவும் விதிக்கக் கூடாது . கடன் அட்டை சேவையை வாடிக்கையாளர் நிறுத்திக் கொள்ள விரும்பினால் அது 7 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அவரது கணக்கு நிறுத்தப்பட்டது தொடர்பான அறிவிப்பு மின்னஞ்சல், குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடன் அட்டை தொடர்பாக அனுப்பப்படும் ஸ்டேட் மென்ட்டில் பணம் செலுத்த குறைந்தபட்சம் 15 நாள் அவகாசம் இருக்கும் வகையில் அனுப்பப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment