"செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடங்கு முன் சதுரங்க வல்லபநாதர் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட வேண்டும்." - திருவடிக்குடில் - சுவாமிகள் தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல் - என்ற ஒரு செய்தியை 'இந்து தமிழ் திசை' நாளேடு நான்கு பத்தி அளவில் படத்துடன் வெளியிட்டுள்ளது.
'செஸ்' தோன்றியதற்கு முன் இந்த செஸ்நாதர் தோன்றினாரா? 'செஸ்' வந்ததற்குப் பிறகு இந்த நாதர் தோன்றினாரா?
புஃட்பால் நாதர், கிரிக்கெட் நாதர், கபடி நாதர், வாலிபால் நாதர், பேட்மிட்டன் நாதர், டென்னிஸ் நாதர் என்று எல்லாம் இருக்கிறார்களா?
இந்தக் கோயிலில் வழிபடுபவர்கள் எல்லாம் ஜெயித்து விடுவார்களா? அதிகபட்சம் பார்த் தாலும் மூன்று பரிசுகள்தானே! வழிபடுபவர்கள் எல்லோருக்கும் பரிசுகள் கிடைக்கப் போவ தில்லையே!
கோயில் என்பது ஒரு சுரண்டல் கருவி என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டுத் தேவைப் படுமா?
மற்றதற்கெல்லாம் தகுதி - திறமை பேசுபவர்கள் உண்மையான திறமையைக் காட்ட வேண்டிய இடத்தில் பக்தியையும், பூஜைகளையும் திணிப் பது எப்படி?
சுரண்டலுக்கு மறுபெயர்தானே பக்தி!
No comments:
Post a Comment