கருவறையே கல்லறையானது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

கருவறையே கல்லறையானது!

ஆரியம் திராவிடரை அழிப்பதற்கு;

தமிழரை பலகூறாய் பிரிப்பதற்கு;

சனாதனக் கருவறை பிரசவித்த;

பேதம் உருவாக்கும் ஜாதியத்தை;

என்றும் இறப்பின்றி காப்பதற்கு;

எக்காலும் திராவிடரை ஆள்வதற்கு;

தமிழர்களை கோயில் கருவறையை

ஊர்தோறும் கட்டப் பணித்து;

ஜாதியை காத்திட்டக் கருவறையே

இன்று ஜாதிக்கு கல்லறையானது!

நீதிமன்றின் நீதிக்கு நீதிசொன்ன

பெரியாரின் சமத்துவக் கொள்கை

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பாகி

உச்சிக் குடுமிகளுக்கு வியர்க்கிறது!

பெரியாரின் மனிதநேயக் கொடி

ஜாதிக் கல்லறை மேல் பறக்கிறது!

சனாதனம் சவக்குழிக்குள் இருக்கிறது!

சமத்துவம் சாகாக்களிப்பில் சிரிக்கிறது!

முனைவர் அதிரடி அன்பழகன்
கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர்
திராவிடர் கழகம்


No comments:

Post a Comment