சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரியில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடத்தாமலும், பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமலும் முழுமையாக சுயநிதி கல்லூரியாக மாற்ற முயற்சிக்கும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், ஒருங்கிணைத்த அனைத்து மாணவர் அமைப்புகளின் போராட்டத்தில் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் பங்கேற்ற திராவிட மாணவர் கழகச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கண்டன உரையாற்றினார். இப்போராட்டத்தில் சென்னை மண்டல மாணவர் கழகச் செயலாளர் தமிழ்செல்வன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ. தொண்டறம், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வில் பேராசிரியர் சிவக்குமார், கல்வியாளர் பிரின்சு கஜேந்திரபாபு, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலச் செயலாளர் தினேஷ் சிறீரங்கராஜ் மற்றும் அறிவுச்செல்வன், ஜெயசீலன் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்பினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். (14.7.2022, கந்தன்சாவடி)
Saturday, July 23, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment