அச்சம் வேண்டாம்
உலகில் குரங்கு அம்மை நோய்த் தொற்று 50 ஆண்டு களாக உள்ளது. அந்த நோய் குறித்து அச்சமடையத் தேவையில்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ள னர்.
ஆலோசனை
இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பாக ஒன்றிய அரசு சார்பில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
நீட்டிப்பு
பொறியியல் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தடுப்புப் பணி
சதுரங்க (செஸ்) ஒலிம்பியாட் போட்டிக்காக சுகாதாரத் துறையைச் சேர்ந்த 344 பேர் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக இல்லை என்றும், இருப்பினும் முன்னெச்சரிக் கையாக தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த அறிவுறுத் தியிருப்பதாகவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சலுகை
மாற்றுத் திறனாளிகள் ஆவின் மய்யங்கள் அமைக்க வாடகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
உரிமை
இலங்கையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் பொதுமக்களின் உரிமை பறிக்கப்படாது என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க பன்னாட்டு தூதர்களிடம் உறுதியளித்துள்ளார்.
புறக்கணிப்பு
டில்லியில் ஆளுநர் நிகழ்ச்சியை நேற்று (24.7.2022) முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்தார்.
No comments:
Post a Comment