சென்னை, ஜூலை 31 மாணவர்களின் இடைநிற்றலை உரிய கவனத்துடன் கையாள வேண்டும் என்றும், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ் நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது எனவும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
மாணவர்களின் இடைநிற்றலை உரிய கவனத்துடன் கையாள வேண்டும் என்றும், பிற மாநிலங்களுடன் ஒப்பி டுகையில் தமிழ்நாடு சிறந்து விளங்கு கிறது எனவும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த முத்துச் செல்வம், மதுரை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கரோனா நோய்த்தொற்று காலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப் பட்டன. இதனால் இணையம் மூலமாக வகுப்புகள் நடந்தன. ஆனால் அரசு பள்ளிகளை பொறுத்தவரை இணைய வகுப்புகளில் பங்கு பெறுவதிலும் பல்வேறு சிக்கல்களை மாணவர்கள் சந்தித்தனர். பல மாணவர்கள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல் லும் நிலை ஏற்பட்டது. ஏராளமான மாணவர்கள் தங்களது படிப்பை பாதியில் கைவிட்டுவிட்டனர்.
இடைநின்ற மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு முறையாக பராமரிக்கப் பட வேண்டும். ஆனால் இதுகுறித்த ஒன்றிய, மாநில அரசுகளின் கணக் கெடுப்பில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அதிகாரிகள் முறையாக கணக்கெடுத்தால்தான் உண்மை நிலை குறித்து தெரியவரும்.
மீண்டும் பள்ளியில் சேர்க்க...
பள்ளியில் இடைநின்ற 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தொடர்பாக கிராமங்கள், ஊரகப்பகுதிகளில் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி உரிய முறையில் கணக்கெடுப்பை நடத்தி, இடைநின்றவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வழக்குரைஞர் அழகுமணி ஆஜராகி, ஏராளமான மாணவர்கள் தங்களது படிப்பை பல்வேறு காரணங் களுக்காக பாதியில் கைவிட்டு உள்ளனர்.
ஆனால் அதுதொடர்பான புள்ளி விவரங்கள் சேகரிப்பதில் குளறுபடிகள் நடந்துள்ளன, என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், குழந்தை தொழிலாளர்களை மீட்கும்போது அவர்களின் குடும்பத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகள் தங்களின் கல்வியை பாதியிலேயே கைவிடுவது என்பது மிகப்பெரும் பிரச்சினையாகும்.
நீதிபதிகள் பாராட்டு
பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாடு கேரள மாநிலங்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்குகின்றன. ஆனாலும் மாணவர்களின் இடை நிற்றலை தமிழ்நாடு அரசு உரிய கவனத்துடன் கையாள வேண்டும், என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், தற்போதைய நிலவரப்படி பள்ளி இடைநின்ற மாணவர்களின் புள்ளி விவரங்கள் தொடர்பாகவும், இடை நிற்றலை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்தும் மனுதாரர் தரப்பில் அறிக் கையாக தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment