ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டில் பெரியார் சமூகக் காப்பு அணியின் மாபெரும் பேரணி - அணி வகுப்பு நடைபெறவிருக்கிறது.
அதற்கான பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சி வகுப்புகள் வரும் 25.7.2022 முதல் 29.7.2022 வரை 5 நாட்கள் தஞ்சாவூரில் நடைபெறுகிறது.
திராவிடர் கழகம், இளைஞரணி மற்றும் மாணவர் கழகத்தின் மாநில, மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் தங்களுடைய பொறுப்பிற்குட்பட்ட பகுதிகளில், பயிற்சியில் பங்கேற்க உள்ள இளைஞரணி - மாணவர் கழகத் தோழர்கள் பெயர் பட்டியலை உடனடியாக திராவிடர் கழகத் தலைமை நிலைய முகவரிக்கு அல்லது dkheadquarters@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- சோ. சுரேஷ்,
மாநில அமைப்பாளர்
பெரியார் சமூகக் காப்பு அணி
குறிப்பு: கழக மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 5 முதல் 10 தோழர்கள்.
No comments:
Post a Comment