பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை, ஜூலை 13  அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் நேரடி நியமன முதற்கட்ட சான்று சரிபார்ப்பு 16ஆம் தேதி தொடங்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட் டுள்ள அறிக்கை:  

கடந்த 2017-- 2018ஆம் ஆண்டில் அரசு பாலிடெக்னிக் கல் லூரிகளில் ஏற்பட்ட 1,060 விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப் படும் என்று கடந்த 2019 நவம்பர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. 

இதையடுத்து, 2021 டிசம்பர் மாதம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு முடிவுகள் 2022 மார்ச்  மாதம் வெளியிடப் பட்டது. இதையடுத்து, போட் டித் தேர்வு எழுதிய நபர்கள் தங்களின் கல்வித் தகுதி, பணி அனுபவம் தொடர்பான கூடுதல் சான்றுகளையும், ஆவணங்களையும் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் மூலம் 2022 மார்ச் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து மேற்கண்ட சான்றுகள், ஆவணங்கள் சரிபார்க் கப் பட்டு, 15 பாடப் பிரிவுகளுக்கு 1:2 என்ற விகித அடிப்படையில்  சான்று சரிபார்ப்புக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத் தில் ஏற்கெனவே வெளியிடப் பட்டுள்ளது.

அந்த பட்டியல்கள் மீது அளிக்கப்பட்ட மறுப்புகள் மீதும் உரிய ஆணைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 

இந்நிலை யில், மேற்கண்ட 15 பாடப் பிரிவுகளில் முதற்கட்டமாக ஜவுளி தொழில் நுட்பம், உற்பத்தி பொறியியல், அச்சு தொழில் நுட்பம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம், கணக்கு ஆகிய பாடங்களுக்கு சான்று சரிபார்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்களுக்கு 16ஆம் தேதி நேரடி சான்று சரிபார்ப்பு நடத்த திட்டமிடப்பட்டுள் ளது. 

மற்ற பாடங்களுக்கு 17 மற்றும் 18ஆம் தேதிகளில் சான்று சரிபார்ப்பு நடத்தப் படும். அழைப்புக் கடிதம்  மற் றும் ஆளறிச் சான்று படிவம்  ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள் ளது. அவற்றை 14ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment