சென்னை, ஜூலை 4- சென்னை அருகே ஒரகடத்தில் காற்றாலை மின் சக்திக்கு தேவையான சாதனங்களை தயாரிக்கும் சுவிட்சர்லாந்தின் குரிட் விண்ட் தனியார் ஆலை திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையை குரிட் குழுமத்தின் தலைவர் ருடால்ஃப் ஹாடோர்ன் மற்றும் சுவிட்சர்லாந்தின் குரிட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மிட்ஜா ஷூல்ஸ் ஆகியோர் திறந்து வைத்தனர். பசுமைத்தடம் மற்றும் சரக்குப் போக்குவரத்து பூங்காவில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.250 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையில் காற்றாலை தொழில்துறைக்கு தேவையான தரமான மூலப் பொருட்கள், சாதனங்கள், தீர்வைகள் கிடைக்கும்.
16 ஏக்கர் நிலப்பரப்பில் 38 ஆயிரம் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவை கொண்டு இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை 300க்கும் மேற் பட்ட ஊழியர்களுக்கு நேரடியாக வேலை வாய்ப்பை வழங்கும். மேலும் இந்த பகுதியில் ஏராளமானவர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். இந்த நிறுவனம் எதிர்காலத்தில் இந்தியாவில் காற்றாலை தொழில்துறைக்கான கூடுதல் சாதனங்களை தயாரிப்ப தற்கான விரிவாக்க திட்டங்களை கொண்டுள்ளது என்று ஆலையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment