சென்னை,ஜூலை 28- தமிழ்நாடு முழுதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில், நகல் பரிசோதகர், ஓட்டுநர், ஒளிப்பட நகல் எடுப்பவர், கட்டளை எழுத்தர் ஆகிய பணி யிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. புதிதாக உருவாக்கப் பட்ட மாவட்டங்களிலும், கீழமை நீதிமன்றங்கள் அமைக் கப்பட்டு வருவதால், காலிப் பணியிடங்கள் அதிகரித் துள்ளன.
இந்நிலையில், இந்த காலிப் பணியிடங்களை நிரப்பும் பணிகளை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இயங்கும் நீதித் துறையின் ஆட்சேர்ப்பு பிரிவு, தற்போது துவங்கியுள்ளது.அதாவது, மாநிலம் முழுதும் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில், நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், இளநிலை, முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை, முதுநிலை கட்டளை பணியாளர், கட்டளை எழுத்தர், ஒளிப்பட நகல் எடுப்பவர், 'லிப்ட்' ஆப்ரேட்டர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்கள், நேரடி தேர்வு வாயிலாக நிரப்பப்பட உள்ளன.இதற்கான அறிவிப்பை, உயர் நீதிமன்றத்தின் நீதித் துறை ஆட்சேர்ப்பு பிரிவு, 24ஆம் தேதி வெளியிட்டுள்ளது. தற்போது 1,412 பணியிடங்கள் காலியாக உள்ளன. 'இணைய வழி' வாயிலாக விண்ணப்பங் களை ஆக., 22ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற விபரங் களை, சென்னை உயர் நீதிமன்ற நீதித் துறை ஆட்சேர்ப்பு பிரிவின், www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment