ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு புதிய ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 4, 2022

ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு புதிய ஆணை

 சென்னை, ஜூலை.4 பேருந்தில் பயணிக்கும் பயணிகளை தரக்குறை வாக நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநர்கள், நடத் துநர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிர் பயணிக்கும் போது நடத்து நர்கள் மரியாதையின்றி நடந்து கொள்வதாக அவ்வபோது புகார்கள் வருகின்றன. ஓட்டுநர்களும், நடத்து நர்களும்  நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடித்து பேருந்தை இயக்க வேண்டும். பயணிகள் மொத்த மாகவோ அல்லது ஒருவரோ பேருந் திற்காக நிற்கும் போது பேருந்தை நிறுத்தி அவர்களை ஏற்றி செல்ல வேண்டும். ஓட்டுநர் பேருந்தை குறித்த பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் பேருந்தை நிறுத்தக் கூடாது. நடத் துநர்கள் வேண்டும் என்றே பேருந்தில் இடம் இல்லை என பேருந்தில் ஏறும் பெண் பயணிகளை இறக்கி விடவோ அல்லது அவர்களிடம் எரிச்சலூட் டும் வகையில் கோபமாகவோ, ஏளன மாகவோ, இழிவாகவோ நடந்து கொள்ளக் கூடாது. 

வயது முதிர்ந்த பெண் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி புரிந்து, பெண் பயணி களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

பெண் பயணிகள் ஏறும் போதும் இறங்கும் போதும் கண்காணித்து, அவர்களை பாதுகாப்பாக பேருந்தில் ஏற்றி இறக்க வேண்டும். பேருந்தை பக்கவாட்டில் நிறுத்தாமல், ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக நிறுத்த வேண்டும். மேலும், பேருந்தில் பயணிகள் இறங்கி ஏறிய பின், நடத்துநரின் சமிக்ஞை கிடைத்தப்பின் கதவுகளை மூடிய நிலையில் தான் ஓட்டுநர் பேருந்தை இயக்க வேண்டும். அதேபோல், ஓட்டுநர் இடது பக்க வாட்டு கண்ணாடி மூலம் பயணிகள் யாரேனும் ஏறுகிறார்களா? அல்லது இறங்குகிறார்களா? என்பதை கவன மாக பார்த்து, அதன் பிறகு தான் பேருந்தை இயக்க வேண்டும். மாண வர்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மகளிர் ஏறி, இறங்கும் போது கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும். முக்கியமாக, பேருந்து புறப்பட்ட பின், பயணிகள் ஓடி வந்தால், பேருந்தை நிறுத்தி அவர்களை  ஏற்றி செல்ல வேண்டும். கதவுகள் இல்லாத பேருந்தில் பயணிகள் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்ய அனுமதிக்க கூடாது. பேருந்து நிறுத்தம் வருவதை முன் கூட்டியே குரல் மூலம் தெரிவித்து பயணிகள் இறங்க தயார் படுத்தவும் வேண்டும். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பேருந்தை இயக்கும் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. இதனை மீறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment