குடந்தை, ஜூலை 25- கும்பகோணம் மாவட்ட திரா விடர் கழகத்தின் தலைவர் வழக்குரைஞர் நிம்மதியின் தாயார் மல்லிகாராணி அவர்களின் இறுதி நிகழ்ச்சி 22.7.2022 அன்று திருநாகேஸ்வரம் இல்லத்தில் நடைபெற்றது.
இறுதி நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கலந்து கொண்டு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக் கோட்டை அன்பழகன், மேனாள் சட்டமன்ற உறுப்பி னர்கள் தவமணி மற்றும் அண்ணாதுரை, இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதன், திமுகவைச் சார்ந்த கலையரசு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அம்பலவாணன், ஓய்வு பெற்ற அஞ்சல் துறை அலுவலர் ரத்தினகுமார், கும்பகோணம் வழக் குரைஞர் சங்கத்தின் தலைவர் ராஜசேகரன், விடுதலை தமிழ் புலிகள் கட்சியினுடைய நிறுவன தலைவர் குடந்தை அரசன், சிபிஅய் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பாரதி, சிபிஅய்எம் மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் செல்வம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், தஞ்சை மண்டல தலைவர் அய்யனார், தஞ்சை மண்டல செயலாளர் குடந்தை குருசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர் சு.விஜயகுமார் மற்றும் பொறியாளர் சிவகுமார், குடந்தை மாநகர கழக செயலாளர் வழக்குரைஞர் ரமேஷ், திருவிடைமருதூர் ஒன்றிய கழகத்தினுடைய தலைவர் எம்.என்.கணேசன், ஒன்றிய செயலாளர் முரு கானந்தம், ஒன்றிய அமைப்பாளர் சிவக்குமார், மாநில மாணவர் கழக துணை செயலாளர் முனைவர் அஜிதன், கும்பகோணம் ஒன்றிய தலைவர் ஜில் ராஜ், செயலாளர் மகாலிங்கம், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் சங்கர், துணைச் செயலாளர் குணசேகரன், கும்பகோணம் மாவட்ட வழக்குரைஞர் அணி செய லாளர் பாபு, மாவட்ட பகுத்தறிவாளர்களாக தலைவர் ஆடிட்டர் சண்முகம்.
தஞ்சை மண்டல மகளிர் அணி செயலாளர் கலைச் செல்வி அமர்சிங், கும்பகோணம் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள் திருநாகேஸ்வரம் திரிபுரசுந்தரி, பவுண்டரீகபுரம் அறிவுமணி, குடந்தை ராணி குருசாமி, அம்மா சத்திரம் அம்பிகா.
மற்றும் நாகை மாவட்ட தலைவர் நெப்போலியன், குடந்தை மாவட்ட துணைத்தலைவர் தமிழ்மணி, திருவாரூர் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், பொதுக் குழு உறுப்பினர் தாராசுரம் இளங்கோவன், குடந்தை மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், தஞ்சை மாநகர செயலாளர் டேவிட், ஆகியோர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
இரங்கல் கூட்டம்
பின்னர் கழகப் பொதுச்செய லாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தை பொதுக்குழு உறுப்பினர் சன்னாபுரம், வழக் குரைஞர் விஜயகுமார் ஒருங்கிணைத்தார்.
மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவமணி மற்றும் அண்ணாதுரை, இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதன், திமுகவைச் சார்ந்த கலையரசு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அம்பல வாணன், ஓய்வு பெற்ற அஞ்சல் துறை அலுவலர் ரத்தினகுமார், கும்பகோணம் வழக்குரைஞர் சங்கத்தின் தலைவர் ராஜசேகரன், விடுதலை தமிழ் புலிகள் கட்சியினுடைய நிறுவன தலைவர் குடந்தை அரசன், சிபிஅய்எம் மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், காவல் உதவி ஆய்வாளர் செல்வம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், தஞ்சை மண்டல தலைவர் அய்யனார், தஞ்சை மண்டல செய லாளர் குடந்தை குருசாமி குடந்தை மாநகர செயலாளர் வழக்குரைஞர் ரமேஷ் ஆகியோர் இரங்கல் உரையாற்றினார்கள்.
பின்னர் எந்தவிதமான மூடச்சடங்குகளும் இல் லாமல் அம்மையார் உடல் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment